Saturday, May 12, 2012

பணம்


பேசியதாய் சொன்ன ,
கடவுள் கல்லாகிவிட ,
இன்று பேசிக்கொண்டு இருக்கிறது
காகிதகடவுள் "பணம் "!

கடவுளை தரிசிக்க
அர்ச்சனை சீட்டு !

கோவில் அர்ச்சனைதட்டில்
பணம் போட்டால் தான்
அய்யர் கூட விபுதி கொடுக்கிறார் !

சில்லறை போடாவிட்டால்
பிச்சக்காரன் கூட
தனக்கு கீழ் என்று
கேவலமாய் பேசுகிறான் !

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
பணம் சம்பாதித்து கொடுக்காவிட்டால் ,
ஊர்சுத்தி என்ற புது பட்டம் !

நடிப்பு என்ற உலகில்
சாயங்களை பூசிக்கொள்ள
"பணம் " பட்டம் !

குச்சி முட்டாய்
வாங்க காசிள்ளவிட்டால்
அப்பனைக்கூட டேய் என கூப்பிடும்
குட்டி குரங்குகள் !

உள்ளே உள்ளதையெல்லாம்
மறைத்துவிட்டு
வெளியே வேடிக்கை காட்டும்
பணக்காரா கழுகுகள் !

காசுக்காக நீதியைகூட
கூண்டில் ஏற்றும் ,
பணம்(பலம்) வாய்ந்த சட்டங்கள் !

ஆறடி பள்ளம் தோண்டவும்
ஆயிரம் ருபாய் பணம் கேட்கும்
வெட்டியான்கள் !

சொத்து ஓட்டத்தை தீர்மானிக்கும்
ரத்த ஓட்டங்கள் ,
கையில் காசில்லாமல் போனால்
கைதட்டி சிரிக்கும் ஏளனக்கூட்டம் !

அப்பனை மகன் வெட்டுகிறான் ,
மகனை அப்பன் வெட்டுகிறான்
எல்லாம் பணத்துக்காக !

நேசமாய் கிடைக்கவேண்டிய
அந்தரங்கம் கூட
காசுக்காக கூவி கூவி தெருவில் !

நூறு ருபாய் விதை போட்டு
ஆயிரம் கொடிகள் கொள்ளையடிக்கும்
அரசியல் திருடர்கள் !

பட்டுபுடவை வாங்கி தராததால்
பகையாளிகளாக மாறும் ,
கணவன் , மனைவிகள் !

அன்பு ,
நேசம் ,
பாசம் ,
எல்லாம் பணத்தில்
அடகுவைத்துவிட்டர்கள் ,
இனி என்ன
பணம் தான் பேசும்

No comments:

Post a Comment