புறாக்கள் உயரத்திலே அதிகமாக தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும். அவ்வாறு மூன்று புறாக்கள் ஒரு கோவில் கோபிரத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டன, ஒருநாள் கோவில் திருவிழாவிற்காக அலங்கரிப்பு வேலைகளில் பக்த்தர்கள் அதிகம் ஈடுபட்டிருந்தனர். அமைதிக்கு இலக்கணமான புறாக்கள் அதிக ஜன கூட்டத்தை விரும்புவதில்லை, ஆதலால் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு ஓர் மசூதியில் நிலை கொண்டன. அங்கு சில காலம் வசித்து வருகையில் ரமளான் திருநாள் நெருங்குகையில் மசூதிக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். புறாக்களும் தமது இருப்பிடத்தை தேவாலயம் ஒன்றிட்க்கு மாறிக்கொண்டது. அங்கும் தமது குறுகிய ஆயுள் காலத்தை வாழ்ந்து முடிக்கவில்லை. நத்தார் கொண்டாட்டத்திர்க்காக வேலைகள் விறுவிறுப்பாக இடம் பெற்றது. அங்கிருத்து பிறிதொரு இந்துக் கோவிலுக்கு மாற்றிக்கொண்டன.
ஓர் நாள் கோவிலின் அடிவாரத்தில் ஓலக்குரல்கள் ஒலித்தது, புறாக்கள் கீழே பார்த்தன பக்த்தர்களிடையே வாள் வெட்டு.
குஞ்சு புறா தாய் புறாவிடம் கேட்டது, ஏன் மனிதர்கள் சண்டையிடுகிறார்கள் என்று. தாய் புறா அதற்க்கு பதிலழித்தது, மனிதர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவம் என்று மதம் பிரித்துள்ளது. மதத்தினால் மனிதர்கள் மதம்பிடித்து திரிகிறனர் என்றது. குஞ்சு புறா மீண்டும் கேட்டது, எங்களுக்கு அப்படி எதுகுமில்லையா என்று கேட்டது. தாய் புறா பதிலழித்தது நமக்கு அப்படி இல்லாதலால் தான் நாம் அவர்களுக்கு மேலே இருக்கிறோம் என்று மனிதனை பார்த்தவாறு எழனமாக குஞ்சு புறாவுக்கு கூறியது.
No comments:
Post a Comment