தவறவிடும் பேருந்துகளில்
கையசைத்து செல்கிறது
எனக்கான வாய்ப்பு..
சொல்ல தயங்கிய
வார்த்தைகளில் தோற்கிறது
என் எல்லா காதலும்..
பரிமாறிக்கொள்ள
பதுங்கிய நிமிடங்களில் கரைகிறது
எனக்கான அனைத்து நட்பும்..
அடியெடுத்து வைக்க தவறும்
முயற்சியில் வீணாகிறது
எதிர்பார்த்த எனக்கான வாழ்வு.... ..
எல்லாம் என்னால் என்பதை
முடிவாய் தெரிந்த பின்பும்...
எப்போதும் போல்
எடுத்துரைக்கிறேன்...
இந்த உலகம் என்னை வாழவிடுவதில்லை.?!..
No comments:
Post a Comment