Monday, February 27, 2012

இந்த வாழ்க்கை...

இந்த வாழ்க்கை எப்படியெல்லாம்
வாழனும் என்று எனக்கு
கற்றுக்கொடுக்கவில்லை....!
மாறாக இப்படி எல்லாம் வாழக்கூடாது
என்றுதான் சொல்லிவிட்டுப் போகிறது...!!

Monday, February 20, 2012

பின்னாளில் ஒரு நாள்..

இவை எல்லாம் சாத்தியமா?
எனும் கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கும்...
இனிவரும் உலகில்
எதுதான் சாத்தியமில்லை...!!

வயதாகி ஓய்வூதியம்
பெரும் கடவுள்...!
புதிதாக வணங்க
இன்னொரு இளைய கடவுள்..!!

பிள்ளைகள் படிக்க
நிலவில் ஒரு பள்ளி!!
தினமும் இருவேளையும்
வந்து செல்லும்
நிலா பள்ளி பேருந்து..!!

புதன் கிரகத்தில்
புளியமரம் நடும் விழா..!
நெப்டியூன் வரை
நீர் தேடும் முயற்சி...!!

சட்டபேரவையில்
மெட்ரோ ராக்கெட் திட்டம் தாக்கல்..!
லஞ்சமில்லா அரசு..!!

நவீன காதல் திருமணங்கள்..!
சாதிமத பேதமில்லா
கூட்டு உறவு மனிதம்...!!
ரேஷன் கடைகளில்
பீட்சா, பர்கர்..!!

இயந்திர முதலாளியிடம் இருநூறு
மனிதர்கள் தொழிலாளிகளாய்..!!
கையெழுத்து போட்டு
சம்பளம் வாங்கும்
நவீன கடவுள்கள்...

சிலை இருக்கும்
மூலஸ்தான கருவறைக்குள்
வலை தொடர்பு (இன்டர்நெட்) கம்ப்யூட்டர்..!!

பாக்கெட்டில் தாய்ப்பால்...
பகுத்தறியும் அரசியல்வாதி..
பங்குசந்தையில் இலங்கை முதலிடம்..!!

கற்பழிப்பு, கொலை, கொள்ளை
எனும் வார்த்தை கூட
பல வருடத்தின் முன் பதித்த
செய்திதாள்களில் வெறும் சாட்சியாய் ..!!

டாக்டர் முன் அமர்ந்து
கர்ப்பம் தரித்த
பதினான்கு வயது பெரியமனுஷி,
பாப்கார்ன் கொறித்து கொண்டே,
" இன்னைக்கே கலைத்து விடுங்கள்
நாளை exam இருக்கு..! " - என்பாள்...!!

இவற்றில் எதுதான்
சாத்தியமில்லை....

மாற்றம் எனும் வார்த்தை மட்டுமே
மாறாமல் வாழும்...!!
மாற்றத்திற்கு உடனே தயாராகு....!!! .

Sunday, February 19, 2012

அழகான அந்தி மாலைபொழுது !

முழுமதியின் முகம் பார்க்க
ஆதவன் அடங்கும் நேரம்
காலையில் பள்ளிக்குச் சென்ற
பிள்ளைகளின் வருகையை எண்ணி
அன்னை வாயிலில் காத்திருக்கும்
அழகு தருணம் ...

கணவனின் வருகையை எண்ணி ,
கனவு காணும் மனைவி
ஆயிரம் முறை பார்த்தாலும்
காதலன் கல்லூரி முடிந்து காத்திருக்கும்
காதலியின் மனதிற்கு வருகை தந்து
இன்பமூட்டும் இனிய தருணம்

அலுவலகம் சென்ற அப்பா
அரும்புகளுக்கு ஆசைபொருளை
வாங்கி வரும் அழகு தருணம்

ஆயிரம் கவலைகளோடு
களைபுற்றிருந்தாலும் மனதை
இறகாக்கும் இனிய பொழுது
கவலைகளோடு ஆர்ப்பரிக்கும்
காலைபொழுதை அடக்கி
அமைதியாக்கும் அந்தி மாலைபொழுது ...

கவலைகளோடு விழித்த கண்ணை
கவலையுற்று உறங்க வைக்கும்
இரவை இனிதே வரவேற்கும்
இனிய தருணம்

தேடாதே..!

மதியுனை சாட்சி வைத்து
மடங்கிப்போனவன் திரும்புவானென
தேடாதே..!
உன்னைப் பொத்திவைத்து
உனக்குக் காவலும் வைத்து
உன்னைக் கனவுகள் காணவும்வைத்து
கனவில் நல்லவனாய் அவனைக்
கற்பனை செய்யவைத்து,
கட்டறுத்துப் போனவனை இனியும்
நீ தேடாதே..!
உன் ஏமாற்றத்தை கவிதையாக்கி
கலையாக்கி பின் அதை
விற்பனைப் பொருளாக்கிடும்
விற்பன்னர்கள் அனேகம்..
அதனால் பெண்ணே..!
மதியொளியில் உனை
மதிக்காமல்..
சென்றவனைத் தேடாதே
இனி சிந்தையிலும் தொடாதே..!

Thursday, February 16, 2012

!!! மரணம் என்ற மாயை !!!


''மரணம்''
இது
ஒரு மாயை
நமக்கெல்லாம் பொதுவானது
நமக்கு பிறகும்
எஞ்சி நிர்ப்பது! - இதற்கு
பயப்படவோ...
இதை பற்றி அறியவோ...
இதைத்தேடி போகவோ...
முயற்ச்சிக்க வேண்டாம்!
உன்னைத்தேடி உன் பின்னே - அது
வந்துகொண்டு இருக்கிறது - உன்னை
நெருங்கிய பிறகு
நீயே அதை தழுவிக்கொள் - அதுவரை
வாழ்ந்துக்கொள்...!!!

எல்லாமே
உன்னைவிட்டு
போன பிறகும்கூட
உனக்காகவே உன்னுடன்
வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னுடைய ஒரே சொந்தம்!

''மரணம்''


வேட்டை நாயைப்போல்
உனக்காக
காத்துக்கொண்டு கிடக்கும்
மருத்துவன் இதற்கு
எதிரி என்றாலும்
ஒரு நாள்
அவனையும் ஜெயிக்கும்...!!!


இதற்கு
சாதி கிடையாது!
நல்லவன், கெட்டவன்
பணக்காரன், ஏழை
முட்டாள், ஞானி - எல்லோருக்கும்
பொதுவானது - உலகில்
அதுமட்டுமே நிலையானது...!!!


ஆயுதமாக
எதிரியாக
கோபமாக
பொறாமையாக
அதிகாரமாக - அப்பப்போ
வெளிப்படும் மரணம் - கொஞ்சம்
அசந்தால்
சுடுகாட்டு பயணம்...!!!


வெட்டு
குத்து
கொலை
கோபம் - போன்ற
மனிதனின்
மரணவெறியை கண்டு
மரணம்கூட சிரிக்கிறது - அதற்கு
மனசெல்லாம் நிறைகிறது...!!!


''உங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ?''
நாம்
வாழ்ந்துகொண்டு இருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
குறைந்துகொண்டிருக்கும்
ஆயுள்...!!!


நாம் நம்
லட்சியத்தை நோக்கி
செல்கிறோமோ? இல்லையோ?
ஆனால்!
மரணத்தை நோக்கிதான்
செல்கிறோம்
என்பது மட்டும்
மறுக்க முடியாத உண்மை...!!!


நீ பிறக்கும்போதே - உன்னுடன்
சேர்ந்தே
பிறந்துவிட்ட மரணத்தை
தள்ளிப்போட
முயற்சிக்கலாமே தவிர
தடுத்துவிட யாரால் முடியும்...???


நாம் நமது
ஒவ்வொரு
பிறந்த நாளின்போதும்
அனைவருக்கும்
இனிப்பு வழங்கி - சந்தோசமாய்
கொண்டாட தவறுவதில்லை
ஆனால்!
கழிந்த இந்த ஓராண்டில்
நாம் என்ன சாதித்தோம்
என்றும் - நமது
ஆயுட்காலம் ஓராண்டு
தீர்ந்துபோய்விட்டதே என்றும்
கொஞ்சம்கூட யோசிக்காமல்
சந்தோசத்தை மட்டுமே தேடும்
சுயநலவாதிகளாய் நாம்...!!!


சிறு சிறு
வளைவுகள் என்று - நாம்
அலச்சிய படுத்திய
இடங்களில் எல்லாம்
பெரிய பெரிய விபத்துக்கள்!

''அசைக்கமுடியாத சக்தியாய்
மரணம்''


வாழ்க்கையின்
நீதி மன்றத்தில்
பாரபச்சமின்றி - காலம்
நமக்கு அளித்த
ஒரே தண்டனை
மரண தண்டனைதான்...!!!


எப்படியும்
வாழ்ந்துவிட வேண்டுமென்ற
ஆசையில்
வாழ்க்கையை தேடி
நீண்ட தூரம் செல்கிறோம்!
எத்தனை பேருக்கு தெரியும்...???
மர்மமாய் நம்
பின்னே தொடரும்
மரணத்தை பற்றி...!!!


மண்ணாசை
பொன்னாசை
பொருளாசை - நூறாண்டு
வாழ்ந்திடவும் பேராசை
ஆனால்!
மரணத்தின்
மீது மட்டும்
யாருக்குமே
ஆசை இல்லை - ஆனாலும்
மரணம் நம்மை
விட்டுவிட போறதில்லை...!!!


ஒன்று மட்டும்
தெரிந்து கொள்ளுங்கள்
பஞ்ச பூதங்களை தவிர
இங்கு
எதுவுமே
தப்ப முடியாது!
மரணத்தின்
பிடியில் இருந்து...!!!


மரணத்தின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
என்றைக்குமே
கடமை தவறாது!
விதியின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
மரணத்தின்
மறு அவதாரம்...!!!


அன்பாலும்
ஒழுக்கத்தாலும்
விட்டு கொடுக்கும்
மனப்பான்மையாலும்
மரணத்தைகூட
தற்காலிகமாய்
மரணம் செய்துவிடலாம்
என்பதை
மறந்து போய்விடாதீர்கள்...!!!


மரணம்
கடவள் மாதிரி
கண்ணுக்கு தெரிவதில்லை
என்றாலும்
கடைசியில் தான்
இருப்பதை
ஆணித்தரமாய் நிருபவித்து
காட்டிவிடும் - ஆனால்
கடவளைத்தான்
கடைசிவரை
காணமுடிவதே இல்லை...!!!


மனிதனின் ஆணவத்தால்
மரணத்திற்கு
இரையாகி கொண்டிருக்கும்
மனிதர்களின் எண்ணிக்கை
நீண்டு கொண்டே போகிறது!

''சுடுகாட்டில்கூட இடம்
பற்றாக்குறை''


மரணத்திற்கு பயந்து
கடவளை
அழைக்கும்போதெல்லாம்
மரணம்
கர்வமாய் சிரிக்கிறது!
கடவளாலும்கூட கடைசியில்
என்னிடம் இருந்து
உன்னை
காப்பாற்றவே முடியாது என்று...!!!


மரணம் பெரியதா?
கடவள் பெரியதா? என்று
ஆராய்ச்சி செய்வதை
நிறுத்திவிட்டு
கிடைத்த வாழ்க்கையை
வளமாக வாழ
முயற்சி செய்
ஏனென்றால்!
கடவளாலும்கூட
மரணத்தை
தடுத்துவிட முடியாது...!!!


கடவளுக்கும்
மரணத்திற்கும்
மனிதர்களுக்கும்
பயந்து வாழ்வதைவிட
மனசாட்சிக்கு பயந்து வாழ்
மரணமே உன்னை
நெருங்க அஞ்சும்...!!!


மரணம் உன்னைவிட
பெரியதுதான்
ஆனாலும் - அது
உன்னை ஒரே ஒரு முறைதான்
ஜெயிக்கமுடியும்!
ஆனால் நீ
வாழும் ஒவ்வொரு நொடியும்
மரணத்தை
ஜெயித்துக்கொண்டு
இருக்கிறாய் என்பதை
மறந்துவிடாதே...!!!


மரணத்தை என்னி
அஞ்சவே வேண்டாம்!
எமன்
எருமையில் ஏறி வந்து
பாசக்கயிரை வீசும்வரை...!!!

Sunday, February 12, 2012

யார் குற்றவாளி?

மனிதப்பண்பை வளர்க்கும்
பாசறைதான் வகுப்பறை
இன்று வெறியாட்டம் கொண்ட
கொலை களமாய் மாறியதேன்?

பண்படா பாறையை
செதுக்குகின்ற சிற்பி போல்
மாணவனை சீர்ப்படுத்தி செம்மையுற
மாற்றுகின்ற ஆயுதமாய்
அறிவுரித்தியமை ஆசிரியர் குற்றமா?

மனம் வளம் இல்லாமல்
பகுத்துணர் பண்பின்றி
வஞ்சனை நெஞ்சமுடன்
வளர்ந்து வரும் இளம் சமுதாயக் குற்றமா?

பண்பை வளர்க்காத
வெற்று வார்த்தைகளை தாங்கி வரும்
புத்தக புழுக்களை உருவாக்குகின்ற
சீர்கெட்ட கல்வித் திட்டத்தின் குற்றமா?

யார் குற்றவாளி?
ஆராய்ந்து பார்க்கின்றேன்
அடி மனதில் தோன்றியது
அகிம்சை, அன்பு, ஆன்மிகம் யாவும்
அகராதிகள் மட்டுமே தாங்கி நிற்பதால்
வன்முறை கலாசாரம் வான் உயர் ஓங்கி
வளரும் சமுதாயத்தை சீரழித்து
நாளும் ஊட்டுகின்ற கொலைவெறி!