மதியுனை சாட்சி வைத்து
மடங்கிப்போனவன் திரும்புவானென
தேடாதே..!
உன்னைப் பொத்திவைத்து
உனக்குக் காவலும் வைத்து
உன்னைக் கனவுகள் காணவும்வைத்து
கனவில் நல்லவனாய் அவனைக்
கற்பனை செய்யவைத்து,
கட்டறுத்துப் போனவனை இனியும்
நீ தேடாதே..!
உன் ஏமாற்றத்தை கவிதையாக்கி
கலையாக்கி பின் அதை
விற்பனைப் பொருளாக்கிடும்
விற்பன்னர்கள் அனேகம்..
அதனால் பெண்ணே..!
மதியொளியில் உனை
மதிக்காமல்..
சென்றவனைத் தேடாதே
இனி சிந்தையிலும் தொடாதே..!
No comments:
Post a Comment