மனிதப்பண்பை வளர்க்கும்
பாசறைதான் வகுப்பறை
இன்று வெறியாட்டம் கொண்ட
கொலை களமாய் மாறியதேன்?
பண்படா பாறையை
செதுக்குகின்ற சிற்பி போல்
மாணவனை சீர்ப்படுத்தி செம்மையுற
மாற்றுகின்ற ஆயுதமாய்
அறிவுரித்தியமை ஆசிரியர் குற்றமா?
மனம் வளம் இல்லாமல்
பகுத்துணர் பண்பின்றி
வஞ்சனை நெஞ்சமுடன்
வளர்ந்து வரும் இளம் சமுதாயக் குற்றமா?
பண்பை வளர்க்காத
வெற்று வார்த்தைகளை தாங்கி வரும்
புத்தக புழுக்களை உருவாக்குகின்ற
சீர்கெட்ட கல்வித் திட்டத்தின் குற்றமா?
யார் குற்றவாளி?
ஆராய்ந்து பார்க்கின்றேன்
அடி மனதில் தோன்றியது
அகிம்சை, அன்பு, ஆன்மிகம் யாவும்
அகராதிகள் மட்டுமே தாங்கி நிற்பதால்
வன்முறை கலாசாரம் வான் உயர் ஓங்கி
வளரும் சமுதாயத்தை சீரழித்து
நாளும் ஊட்டுகின்ற கொலைவெறி!
No comments:
Post a Comment