Thursday, February 16, 2012
!!! மரணம் என்ற மாயை !!!
''மரணம்''
இது
ஒரு மாயை
நமக்கெல்லாம் பொதுவானது
நமக்கு பிறகும்
எஞ்சி நிர்ப்பது! - இதற்கு
பயப்படவோ...
இதை பற்றி அறியவோ...
இதைத்தேடி போகவோ...
முயற்ச்சிக்க வேண்டாம்!
உன்னைத்தேடி உன் பின்னே - அது
வந்துகொண்டு இருக்கிறது - உன்னை
நெருங்கிய பிறகு
நீயே அதை தழுவிக்கொள் - அதுவரை
வாழ்ந்துக்கொள்...!!!
எல்லாமே
உன்னைவிட்டு
போன பிறகும்கூட
உனக்காகவே உன்னுடன்
வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னுடைய ஒரே சொந்தம்!
''மரணம்''
வேட்டை நாயைப்போல்
உனக்காக
காத்துக்கொண்டு கிடக்கும்
மருத்துவன் இதற்கு
எதிரி என்றாலும்
ஒரு நாள்
அவனையும் ஜெயிக்கும்...!!!
இதற்கு
சாதி கிடையாது!
நல்லவன், கெட்டவன்
பணக்காரன், ஏழை
முட்டாள், ஞானி - எல்லோருக்கும்
பொதுவானது - உலகில்
அதுமட்டுமே நிலையானது...!!!
ஆயுதமாக
எதிரியாக
கோபமாக
பொறாமையாக
அதிகாரமாக - அப்பப்போ
வெளிப்படும் மரணம் - கொஞ்சம்
அசந்தால்
சுடுகாட்டு பயணம்...!!!
வெட்டு
குத்து
கொலை
கோபம் - போன்ற
மனிதனின்
மரணவெறியை கண்டு
மரணம்கூட சிரிக்கிறது - அதற்கு
மனசெல்லாம் நிறைகிறது...!!!
''உங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ?''
நாம்
வாழ்ந்துகொண்டு இருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
குறைந்துகொண்டிருக்கும்
ஆயுள்...!!!
நாம் நம்
லட்சியத்தை நோக்கி
செல்கிறோமோ? இல்லையோ?
ஆனால்!
மரணத்தை நோக்கிதான்
செல்கிறோம்
என்பது மட்டும்
மறுக்க முடியாத உண்மை...!!!
நீ பிறக்கும்போதே - உன்னுடன்
சேர்ந்தே
பிறந்துவிட்ட மரணத்தை
தள்ளிப்போட
முயற்சிக்கலாமே தவிர
தடுத்துவிட யாரால் முடியும்...???
நாம் நமது
ஒவ்வொரு
பிறந்த நாளின்போதும்
அனைவருக்கும்
இனிப்பு வழங்கி - சந்தோசமாய்
கொண்டாட தவறுவதில்லை
ஆனால்!
கழிந்த இந்த ஓராண்டில்
நாம் என்ன சாதித்தோம்
என்றும் - நமது
ஆயுட்காலம் ஓராண்டு
தீர்ந்துபோய்விட்டதே என்றும்
கொஞ்சம்கூட யோசிக்காமல்
சந்தோசத்தை மட்டுமே தேடும்
சுயநலவாதிகளாய் நாம்...!!!
சிறு சிறு
வளைவுகள் என்று - நாம்
அலச்சிய படுத்திய
இடங்களில் எல்லாம்
பெரிய பெரிய விபத்துக்கள்!
''அசைக்கமுடியாத சக்தியாய்
மரணம்''
வாழ்க்கையின்
நீதி மன்றத்தில்
பாரபச்சமின்றி - காலம்
நமக்கு அளித்த
ஒரே தண்டனை
மரண தண்டனைதான்...!!!
எப்படியும்
வாழ்ந்துவிட வேண்டுமென்ற
ஆசையில்
வாழ்க்கையை தேடி
நீண்ட தூரம் செல்கிறோம்!
எத்தனை பேருக்கு தெரியும்...???
மர்மமாய் நம்
பின்னே தொடரும்
மரணத்தை பற்றி...!!!
மண்ணாசை
பொன்னாசை
பொருளாசை - நூறாண்டு
வாழ்ந்திடவும் பேராசை
ஆனால்!
மரணத்தின்
மீது மட்டும்
யாருக்குமே
ஆசை இல்லை - ஆனாலும்
மரணம் நம்மை
விட்டுவிட போறதில்லை...!!!
ஒன்று மட்டும்
தெரிந்து கொள்ளுங்கள்
பஞ்ச பூதங்களை தவிர
இங்கு
எதுவுமே
தப்ப முடியாது!
மரணத்தின்
பிடியில் இருந்து...!!!
மரணத்தின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
என்றைக்குமே
கடமை தவறாது!
விதியின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
மரணத்தின்
மறு அவதாரம்...!!!
அன்பாலும்
ஒழுக்கத்தாலும்
விட்டு கொடுக்கும்
மனப்பான்மையாலும்
மரணத்தைகூட
தற்காலிகமாய்
மரணம் செய்துவிடலாம்
என்பதை
மறந்து போய்விடாதீர்கள்...!!!
மரணம்
கடவள் மாதிரி
கண்ணுக்கு தெரிவதில்லை
என்றாலும்
கடைசியில் தான்
இருப்பதை
ஆணித்தரமாய் நிருபவித்து
காட்டிவிடும் - ஆனால்
கடவளைத்தான்
கடைசிவரை
காணமுடிவதே இல்லை...!!!
மனிதனின் ஆணவத்தால்
மரணத்திற்கு
இரையாகி கொண்டிருக்கும்
மனிதர்களின் எண்ணிக்கை
நீண்டு கொண்டே போகிறது!
''சுடுகாட்டில்கூட இடம்
பற்றாக்குறை''
மரணத்திற்கு பயந்து
கடவளை
அழைக்கும்போதெல்லாம்
மரணம்
கர்வமாய் சிரிக்கிறது!
கடவளாலும்கூட கடைசியில்
என்னிடம் இருந்து
உன்னை
காப்பாற்றவே முடியாது என்று...!!!
மரணம் பெரியதா?
கடவள் பெரியதா? என்று
ஆராய்ச்சி செய்வதை
நிறுத்திவிட்டு
கிடைத்த வாழ்க்கையை
வளமாக வாழ
முயற்சி செய்
ஏனென்றால்!
கடவளாலும்கூட
மரணத்தை
தடுத்துவிட முடியாது...!!!
கடவளுக்கும்
மரணத்திற்கும்
மனிதர்களுக்கும்
பயந்து வாழ்வதைவிட
மனசாட்சிக்கு பயந்து வாழ்
மரணமே உன்னை
நெருங்க அஞ்சும்...!!!
மரணம் உன்னைவிட
பெரியதுதான்
ஆனாலும் - அது
உன்னை ஒரே ஒரு முறைதான்
ஜெயிக்கமுடியும்!
ஆனால் நீ
வாழும் ஒவ்வொரு நொடியும்
மரணத்தை
ஜெயித்துக்கொண்டு
இருக்கிறாய் என்பதை
மறந்துவிடாதே...!!!
மரணத்தை என்னி
அஞ்சவே வேண்டாம்!
எமன்
எருமையில் ஏறி வந்து
பாசக்கயிரை வீசும்வரை...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment