Tuesday, November 29, 2011

கொடியது

உண்மையான வெறுப்பை விட கொடியது பொய்யான நட்பு

Monday, November 28, 2011

க‌வ‌லைக‌ள்


நீ உன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
என்னை மறந்து விடுகிறாய்…
இப்படிக்கு கவலைகள்

Sunday, November 27, 2011

இயற்கை பேசினால்


மெளனமாக இருப்பதே
இயற்கைக்கு அழகு – அது
மெளனத்தை கலைத்தால்
அது செயற்கை…
ஓவியம் பேசியதில்லை
மற்றவர்களை பேச வைத்ததுண்டு
இயற்கை மெளனமாக இருக்கும்
ஆனால் மற்றவர்களை பேசவைக்கும்

என்னை முன்வைத்து


சமீபமாக காணமல்
போய்விட்டான் .


மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.


தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது

தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .

Saturday, November 26, 2011

நான் - எனது நீட்சி


முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது- சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
கூசாமல்
கொடியவனின் அடுத்த பிறந்தநாள் காண துடிக்கிறது சுரணையற்ற எம்மினம் - இன்று

பயணங்கள்


வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Friday, November 25, 2011

நீ

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைகள்
மீண்டும் கிளறிவிடுகின்றன
மறந்துபோன
உன் நினைவுகளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

பயணம்


தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்!

வார்த்தைகள்


கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

நண்பர்கள்

நண்பர்கள்
பிரிவதில்லை காரணம்
பிரிவதற்கு அவர்கள்
உறவுகள் அல்ல
உணர்வுகள்.
இருந்தும், சில வெட்டுக்கிளிகள்
இருக்கத்தான் செய்வார்கள்.

Thursday, November 24, 2011

தன்னியக்க வங்கி இயந்திரத்தில் எவ்வாறு நான்கு இலக்க இரகசிக குறியீடு வந்தது தெரியுமா

தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இயந்திரமாக்கி, தன்னியக்கமாக்கியது. பொதுவாக இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விடுவர். இந்த இயந்திரம் 1967 ம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன். தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.

Tuesday, November 22, 2011

உலகளாவிய வலை - World Wide Web

உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சேர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில் "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, அந்த வலையை டிசம்பரில் வெளியிட்டனர். முன்பே உள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டு, களப் பெயர்கள் மற்றும் எச்.டி.எம்.எல் (HTML) மொழிக்கான சர்வதேசத் தரநிலைகள் சேர்க்கப்பட்டு உலகளவில் பிற வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி, பெர்னெர்ஸ்-லீ (வலைப் பக்கங்களைத் தொகுக்கப் பயன்படும் மார்க்-அப் மொழிகள் போன்ற) வலைத் தரநிலைகளின் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதிலும் வழிநடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தார், சமீபத்திய ஆண்டுகளில் தனது கவனத்தை பொருள் வலையில் செலுத்தி வருகிறார்.

உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்.

Monday, November 21, 2011

நகம் கடித்தல்

நகம் கடித்தல் (Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.


ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள்.

குழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
வயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
நகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.
குழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நம்பப்படும் காரணிகள்.
தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.

Sunday, November 20, 2011

சிந்தனை

நல்ல நண்பனை விரும்பினால் நல்லவனாய் இரு- மகாத்மா காந்தி

சண்டை செய்யும் வழிமுறை;

சண்டை செய்யும் வழிமுறை;
தேவையான பொருட்கள்:
காதல் 2kg
நட்பு 200g இது காரம் அதிகம் எனவே அதிகம் போடக்கூடாது.
பெற்றோர் 100g
அரட்டை தேவையான அளவு.
செய்முறை:
முதலில் காதலை வாயில் போட்டு நன்றாக வறுக்கவும். இடையிடையே அரட்டையை போட்டு நன்கு வறுக்கவும். நன்கு சூடேறியதும் பெற்றோரை போட்டு கிண்டுங்கள். அப்போது பொங்கியெழும் நேரம் நட்பை தூவி இறக்குங்கள்.
சூடான சண்டை ரெடி

Friday, November 18, 2011

இந்து சாதனம் (Hindu Organ) என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ்.

இந்து சாதனம்

இந்து சாதனம் (Hindu Organ) என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ் ஆகும். இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்றும் சைவபரிபாலன சபையினரால் மாதமொரு முறை வெளியிடப்பட்டு வருகின்றது.

வரலாறு

இந்து சாதனம் பத்திரிகை செப்டம்பர் 11, 1889ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையினரால் அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் (Hindu Organ) கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது.

இந்த இரு மொழிப் பத்திரிகை ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.
ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கியவரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமாகிய தா. செல்லப்பாபிள்ளை அவர்கள். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங்கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர்.

தமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை. அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர்.

அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.

உசாத்துணை

மார்ட்டின், ஜோன் எச்., Notes on Jaffna, American Ceylon Mission, தெல்லிப்பழை, 1923 (இரண்டாம் பதிப்பு: 2003)
பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி), கொழும்பு, 1990

Thursday, November 17, 2011

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மட்டுமே தனக்கென்று தனியான அரசியலமைப்பையும் கொடியையும் கொண்டுள்ளது.

சம்மு காசுமீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருமான்மையினராக உள்ளனர்; லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காசுமீர் மாநிலம், காசுமீர் பிரச்சனையால் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ”இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.

சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.


சம்மு காசுமீர் மாநில கொடி
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல்.

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு ஜூன் 13 முதல் ஜூன் 20 வரை இடம்பெற்றது. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.

1931 இல் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு முன்னர் இருந்து வந்த இலங்கை சட்டசபைக்குப் பதிலாக இலங்கை அரச சபை உருவாக்கப்பட்டது. 58 உறுப்பினர்களில் 50 பேர் பொதுமக்களாலும், 8 பேர் பிரித்தானிய ஆளுநரினாலும் நியமிக்கப்பட்டனர்.

பழைய சட்டசபை 1931 ஏப்ரல் 17இல் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்க சபைக்கான மனுக்கள் 1931 மே 4 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது. இதனையடுத்து இலங்கையின் வட மாகாணத்தில் நான்கு தொகுதிகளில் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன், ஒன்பது தொகுதிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.ஏனைய 37 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் 1931 ஜூன் 13 முதல் 20 வரை இடம்பெற்றன.

இடைத்தேர்தல்கள்

வட மாகாணத்தின் 4 தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன. பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

யாழ்ப்பாணம் - அருணாசலம் மகாதேவா
காங்கேசன்துறை - சுப்பையா நடேசன்
ஊர்காவற்துறை - நெவின்ஸ் செல்வதுரை
பருத்தித்துறை - ஜி. ஜி. பொன்னம்பலம்

மங்காத்தா (விளையாட்டு)


மங்காத்தா ஒரு சீட்டாட்டம். சூதாடப் பயன்படுகிறது. இதனை ஆட இரு ஆட்டக்காரர்களும் ஒரு சீட்டுக்கட்டும் தேவை. ஆட்டக்காரர்கள் சீட்டைப் போடுபவர் சீட்டுத் தெரிவு செய்பவர் என இரு வகைப்படுவர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு ஆட்டக்காரர்களும் சமமான அளவு பந்தயம் கட்டுவர். பின் சீட்டைப் போடுபவர் எதிராளியிடம் ஒரு சீட்டைத் தெரிவு செய்யச் சொல்லுவார். சீட்டு தெரிவான பின்னால், தன் கையிலிருந்த கட்டிலிருந்து சீட்டுகளை ஒவ்வொன்றாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் போடுவார். ஒன்று “உள்ளே” இன்னொன்று “வெளியே”. ஒவ்வொரு சீட்டு விழும் போது “உள்ளே” அல்லது “வெளியே” என்று உரக்க சொல்லுவார். எதிராளி தேர்வு செய்த சீட்டு வரும் வரை சீட்டுகளை போட்டுக் கொண்டே இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சீட்டு “உள்ளே” பிரிவில் விழுந்தால் சீட்டைப் போடுபவர் வென்றவராவர்; “வெளியே” பிரிவில் விழுந்தால் சீட்டைத் தெரிவர் வென்றவராவார். பந்தையப் பணம் முழுவதும் வெற்றி பெற்றவருக்கு.

Sunday, November 13, 2011

சாக்கிரட்டீசு - Socrates

சாக்கிரட்டீசு (கிமு 470 - கிமு 399) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.
சாக்கிரட்டீசின் முறை

சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.

வெளி இணைப்புகள்

சாக்ரடீஸ் பற்றி
நகரத்தின் சிந்தனாவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருண்த்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாககாமல்,தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது ‘Great Dialogues’ புத்தகத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
விஷம் அருந்தும் சற்று நேரத்துககு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்ககப்பட்டதால், தன் கால்களை தேய்த்துவிட்டுக கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ‘ஆன்மாவுககு மரணமுண்டா, மறு பிறவு என்பது இருககிறதா?’ என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம். இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுககமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.
சாகும் தருவாயில்கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்கக முடிகிறது. அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, ‘என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைககுள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுககு கோபம் ஏதும் இல்லையே?’ என்று குரல் உடைந்து அழ,
எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.
“எனககு விஷம் தயாராக இருககிறதா?”
அவருடைய முதன்மை சீடர் கரீட்டோ கண்ணில் நீர்வழிய,’அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக கொள்ளலாம்’ என்றார் பதற்றமாக.
‘நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா கரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிககாதா?’ என்றுவிட்டு உடனே விஷக கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் சாவு பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருககு இருந்திருந்தால் சாவு எனும் ‘வாழ்வின் ஒருமுறை’ நிகழ்வுககு அவ்வள்வு தயாராய் இருந்திருப்பார்?.
தன் சாவு- நிச்சயமான ஒன்று என்கிற அறிவு,அதிகார வர்ககம் அவருககு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்ககிற அறிவு, அவருககு இருந்ததால்தான் அவரால் சாவு என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காகக முடிந்திருககிறது.
அது மட்டுமல்ல!
விஷத்தை அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார். பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்த அதுவரை சோகத்தை அடககி வைத்துக கொண்டிருந்த சீடர்கள் ஒவ்வொருவரும் கதற,’ என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக இருககுமே!’ என்றாராம்.
‘என்ன ஒரு மனிதர்?’ என்று பிரமிககத் தோன்றுகிறதல்லவா?.
அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்’ என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்’ என்றோ, இறைவனடி சேர்ந்தார்’ என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை ‘சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.
ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருககிறது!.
Jana1163

Thursday, November 10, 2011

ந‌வோத‌யா ப‌ள்ளியும் தமிழ்ப்பற்றும்

நவோதயா பள்ளி
நவோதயா பள்ளி இந்தியாவில் எல்லா மாநிலத்துலயும் இருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் இல்ல. இது வந்தால் ஏகப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பலன் பெற முடியும்...

பாண்டிசேரியில் மிக சிறப்பாக நடக்குது இந்த இலவசபள்ளி. இந்த வருடம் 100% தேர்ச்சி.

சிலர்

சிலர் நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்துடக்கூடாது தமிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க...

இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் டிவி நிகழ்ச்சியில பிற மொழி இருந்தால் அதை பார்க்கவே மாட்டேன்னு சொல்றாங்க...

தமிழ் படங்களில் தமிழ் வார்த்தையை தவிர வேற எதாவது ஒரு வார்த்தை இருந்தா கூட அந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன்னு சொல்லுறாங்க.

தமிழ் பாட்டுல தமிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்கவே மாட்டோம்..ரேடியோவ ஆஃப் பண்ணிடுவோம்னு சொல்லுறாங்க.

ம்ஹீம் இதுவரை சொன்னது இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க, கேட்க நமக்கு பிடிக்கும். இதுல எல்லாம் நம் தமிழ் பற்றை காட்டவே மாட்டோம்.

ஆனால் ஒரு ஏழைக்கு இலவச பள்ளி, நல்ல தரமான கல்வி, நல்ல பழக்க வழக்கம், உணவு, உடை கொடுக்கறேன்னு நவோதயா இயக்கம் வந்துடுச்சினா மட்டும் நம்ம தமிழ் பற்ற காட்டுறோம்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இதுவே தான் இலங்கையில் நடப்பதுவும்.

நாம தான் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள்... ஏழைகளின் வயிற்றில் அடித்து தான் நம் தமிழ் பற்றை காட்டுவோம்.
தமிழ் தமிழ் என்று புலம்பெயர் நாட்டில் இருந்து சிலர் தமிழ் பற்றில் உள்ளது போல் ஈழ போரின் இறுதியில் ஏன் இன்று கூட கத்துகிறார்கள். புலம்பெயர் தமிழர் ஒருவரை சந்தித்த போது அவர் ஒரு தகவலை சொன்னார் வேடிக்கையாகவும் பிறரை உலகநியதி தெரியாதவர்களாகவும் தாம் தமிழ் பற்றாளர் போலவும் சித்தரித்தார், அவர் கூறியது " நான் ஈழபோரின் இறுதிகாலத்தில் தமிழ் உறவுகளுக்காக இரண்டு நாட்கள் வீதியில் படுத்து உண்ணாவிரதம் இருந்ததாக" கூறினார். நான் அவரிடம் கேட்டேன், உங்கள போல எத்தனைபேர் எத்தன ஆண்டுகளா உண்ணாவிரதம் இருக்கிறியள்? உங்களால என்ன சாதிக்க முடிந்ததது. உங்கிருந்து உதய் செய்வத விட இலங்கைபோய் இருதிபோரில் நின்றிந்தால் பலன் ஏதும் கிடைத்திருக்கும் அல்லவா? என்றேன், அவர் கூறினார் வேடிக்கையாகவும் சற்று வருத்தமாகவும்,அவரின் மனதில் உள்ளவை வெளிவந்தது."நான் போயிருப்பன் குடும்பத்தை யார் பார்க்கிறது என்றார். பதிலுக்கு கேட்டேன் இலங்கையில் உள்ளவர்கள் எவருக்கும் குடும்பமே இல்லையா? உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு எவ்வளவு வசுலாகியது? என்று கேட்க, எப்படி தெரிந்தது என்ற குற்ற உன்னர்வுடன் பார்த்தார். தயவு செய்து நீங்கள் ஈழத்தில் உள்ள தமிழருக்கு ஏதும் செய்ய விரும்பினால் இலங்கைக்கு போய் செய்யுங்கள். அங்கேயிருப்பவர்கள் அனாதாராவாக இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் நினைத்த பாட்டிற்கு எதையும் இனியாவது செய்யாதீர்கள் என்று சொன்னேன்.

விடயத்துக்கு வருவோம்

நவோதயா பள்ளி தமிழகத்துக்கு வந்து விடக் கூடாதுன்னு சொல்லுற நாம இதுவரை எத்தனை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து இருக்கோம்...

நாமும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். உதவி செய்றவங்களையும் செய்ய விட மாட்டோம்.

==========================


அது பற்றிய சில கட்டுரைகள்


சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி

புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.


============================================

இதுவும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசுபள்ளி தான்....அவங்களால முடியுது.... நம்ப மாநில அரசினால் முடிவதில்லை...ஏன்?

=============================================

2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009

எழுத்தின் அளவு :


நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.

அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும். ஆனால் எத்தனை கல்லூரிகள் சமூகச்சீர்கேடாகவும் கல்லூரி பேருந்துகளிலும்,கல்லூரி வளாகத்திலும் அரங்கேறும் காட்சிகள். அரசியல் இலாபத்துக்காகவும், கைநாட்டு கொடுத்து பட்டபடிப்பு முடிப்பதும் சாதாரண விடயமாகிவிட்டது. தமிழ்நாட்டு படிப்பிற்கு வேலையே இல்லை என்றநிலை.

Tuesday, November 8, 2011

தூரங்கள்

தூரங்கள்

காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
நிணல்....

தவிப்பு...

தவிப்பு
திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்.....

Sunday, November 6, 2011

உண்மை உணர

உண்மை உணர

ஒவ்வொரு நிகழ்விற்கும்
மூன்று பக்கம் உண்டு !
ஆம்
ஒன்று
உனது பக்கம் !
இரண்டு
அவர்கள் பக்கம் !
மூன்று
உண்மையின் பக்கம் !

Saturday, November 5, 2011

பக்கத்தில் நடந்துவா ...!

பக்கத்தில் நடந்துவா ...!

என்பின்னால் நீ
நடந்து வராதே !
உன்னை
வழிநடத்திச் செல்ல
என்னால்
முடியாமல் போகலாம் !

என் முன்னாள் நீ
நடந்து செல்லாதே!
உன்னைப்
பின்பற்றித் தொடர்ந்துவர
என்னால்
முடியாமல் போகலாம் !

என்பக்கத்தில் நீ
என்னோடு சேர்ந்து நடந்துவா !
நல்ல நண்பனாய்
உன்னோடு சேர்ந்து
நடப்பேன் நான் !

முதுமை


முதுமை


மனிதன்
புறப்பட்ட இடம் நோக்கி
புறப்படும் பயணம் !

மனிதனுக்கு
மீண்டும் ஒரு
குழந்தைப் பருவம் !

மனித
எந்திரத்தின்
தேய்மான வெளிப்பாடு !

மனிதன்
வாழ்க்கைப் பாடத்தை
புரிந்து வாழத் தொடங்கும் காலம் !

மனிதன்
வீடு முடிந்து
காடு செல்ல எண்ணப்படும்
"கவுண்டவுன்" நாட்களின்
ஆரம்பம் !

பிள்ளைகளுக்குப்
பெற்றோர்
பிள்ளையாகும் படலம் !

முதுமை..
முன்னால் நிற்கும்
இறப்பை எண்ணி கலங்கும் !
முடிந்துபோன
இளமைக்காக ஏங்கும்!!

முதுமையில் ...
அழகு அழிவாகும்
அறிவு அழகாகும்
உடல் மெலிதாகும்
உள்ளம் தெளிவாகும் !!

மனிதனின்
மனம் முதுமையானால்
இளமையிலும்
முதுமை ஏற்ப்படுவது உண்மை !

Friday, November 4, 2011

இரவும் பகலும்

இரவும்
பகலும்


இரவு

உழைத்து களைத்த உலகம்
உறங்கிக் களைப்பு நீங்க
எவனோ ஒருவன் போர்த்திவிட்ட
"கருப்புக் கம்பளம் !"

கயவர்களும் கள்வர்களும்
கடமையாற்றக்
காத்திருக்கும் காலம் !

சூரியனைத் தொடர்ந்து
விடியும்வரை நகரும்
"கருநிழல்!"

பகல்

உறங்கும் உயிரினங்களை
ஒட்டுமொத்தமாக எழுப்பிவிட
உதயசூரியன் நீட்டும்
"ஒளிக்கரம் !"

இரவோடு உறவாடி
ஓய்வு கண்ட உலகம்
வயிற்றுக்காகவும்
வசதிக்காகவும்
பாடுபட
எவனோ ஒருவன் அளிக்கும்
"அவகாசக் காலம் !"

சூரியக் கண்ணாடியில்
பூமியின் தோற்றம் !

Thursday, November 3, 2011

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைச் சூறாவளி

கடந்த சில மாதங்களாக தமிழ் விக்கிப்பீடியா இதுவரை சந்தித்திராத ஓர் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பலகாலமாக 68ஆம் இடத்திலே இருந்த தமிழ் விக்கிப்பீடியா 64 வரை முன்னேறக்கூடிய நிலையை அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான உந்துசக்தியாகவும் தொடர் உழைப்பாளராகவும் இருப்பவர் தன்னந்தனியே 3000 கட்டுரைகளை மூன்றே மாதங்களில் ஆக்கிய இலங்கைச் சூறாவளி விக்கிப்பீடியர் புன்னியாமீன் ஆவார்.

பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். கல்வித்துறையில் பல பொறுப்புகளுக்குப் பிறகு, தற்போது வெளியீட்டு நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இதழியலில் ஆர்வம் மிக்க இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கிய பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 200 கட்டுரைகள் எழுதும் சாதனை நிகழ்த்த திட்டமிட்டார். தனது அலுவலக உதவியாளர்கள், மனைவி மற்றும் மக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் எண்ணியதற்கு மேலாக ஒரே நாளில் 300 கட்டுரைகள் இட்டு சாதனை படைத்தார். சமூகமாக இயங்கும் விக்கிப்பீடியாவின் நெறிகளுக்குட்பட்டு இவர் நிகழ்த்தியுள்ள இந்த வேள்வி மற்ற தமிழர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருந்து தமிழ் விக்கிப்பீடியா விரைவில் 50000 கட்டுரைகளை எட்ட வழிசெய்யும்.

அறியவேண்டியது....!

அறியவேண்டியது....!


தோல்வியைத் தொடர்ந்து
சுமந்தவருக்கு மட்டுமே
வெற்றிவாகனத்தில்
பயணிப்பதன் சுகம் தெரியும் !

துன்பப் பாதையில்
தொடர்ந்து பயணிப்பவருக்கு மட்டுமே
இன்பச் சிம்மாசனத்தில் அமர்ந்ததன்
இதம் தெரியும் !

நிஜம் தெரியாமல்
நிழலில் வாழ்பவருக்கு மட்டுமே
நிஜத்தின் நிழலோடு
வெயிலில் உழைப்பவனின்
உண்மை தெரியும் !

போதும் என்பதற்குமேல் என்பதன்
பொருள் அறிந்தவருக்கு மட்டுமே
"போதும்"என்பதன்
பொருள் தெரியும் !

உனக்கு நீயே போதிமரம் ! (சிந்தனை வரிகள்


உனக்கு நீயே போதிமரம் !
(சிந்தனை வரிகள் )


கருவறை தொடங்கி கல்லறையில் முடியும்
மனிதனின் வாழ்க்கைப் பயணம்
உண்பதிலும் உறங்குவதிலும் உரையாடுவதிலும்
முடிந்துவிடுவதில்லை !
முழுமை அடைவதுமில்லை !

தன்னை அறிந்தவனே
தரணியில் முழுமையான மனிதன் ஆவான் !

குழந்தையாகத் தொடங்கும் மனிதப் பரிணாமம்
முழுமைமனிதனாக
முற்றுப் பெறவேண்டும்
உருவில் அல்ல !
அறிவில் !!"

நண்பனே ! நீ
எதைக் கேட்டாலும்
எதைச் சொன்னாலும்
எதைச் செய்தாலும்
ஏன்? எதற்கு ? எப்படி ?
என்ற வினாக்களை உனக்குள்
எழுப்பு ! அப்பொழுது
உன்னையே நீ அறிவாய் !
உலகையும் நீ அறிவாய் !"
என்று அன்றே எடுத்துரைத்தார்

"உனக்கு நீயே போதிமரம்!"
என்பதன் வழித்தடம்தான்
சாக்ரட்டீசின் அந்த
தத்துவக் குரல் !


மனமே உனக்கு ஆசான் !
மனச்சாட்சியே உனது நீதிபதி!
உனது தவறுகளை முதலில் சுட்டிக்காட்டிக்
கண்டனம் தெரிவிப்பதும்
உனது சாதனைகளை கைதட்டி முதலில்
பாராட்டுவதும் உனது மனசாட்சிதான் !

நீ செய்யும் தவறுகளும்
உனக்கு ஏற்படும் தோல்விகளும்
உன்னை ஞானம் பெறுவதற்கான பாதையில்
உனது மனத்திருத்தம் மற்றும் விடா முயற்சியின் மூலம்
அழைத்துச் செல்லும்

தவறுதல் மனித இயல்பு !
திருந்திக் கொள்வது மனித மரபு !
திருந்தியவன் உயர்ந்தவனாகிறான்
திருந்தாதவன்வருந்தியே மாய்கின்றான் !

நீ
செய்யும் பாவங்கள் புண்ணியங்கள் தர்மங்கள் அதர்மங்கள்
அத்தனையும் உனது" மனம் "
அன்றாடம் பட்டியலிடுகின்றது
அப்பொழுது உனது"மனசாட்சி "
நல்லவைகளுக்கு "மகிழ்ச்சி" "திருப்தி '
என்ற பரிசுகளை வழங்குகிறது
தீயவைகளுக்கு ":குற்றஉணர்வு"மனஉளைச்சல் "
என்ற தண்டனைகளை வழங்குகின்றது !

உனக்கு நீயே போதிமரம் இதை உணர்ந்தால்
உனக்கு ஞானம் வரும் !

ஞானம் தேடி நீ புத்தரைப்போல்
வனத்திற்குள் செல்லாதே
உன் மனதிற்குள் செல் ! அங்கே
உனது தேடலின்மூலம்
ஞானப் புதையல்களைப் பெறலாம்!

உனது செயலுக்கு வழி வகுப்பது அறிவு !
உனது செயலுக்கு வழி கட்டுவது மனசு !
வழி வகுப்பவன் உயர்ந்தவனா ?
வழி காட்டுபவன் உயர்ந்தவனா ?
முடிவு உன்கையில் !
முடிவை அறிந்துகொண்டால் நீ
ஞானம் பெற்ற்வனாகின்றாய் !

இறுதியாக இந்த
வினாவை எழுப்பி
விடைபெறுகின்றேன் !

"விண்ணைத் தோண்டி விந்தைகள் காணும் மனிதா !
மண்ணைத் தோண்டி பொன்னைக் காணும் மனிதா !
உன்னைத் தோண்டி உன்னைக் காண்பது எப்போது ?"

பி .கு :இந்த வினாவிற்குரிய விடையை நீ
அறிந்துவிட்ட்டால் உண்மையில் நீயே ஞானி !










காந்தத்தினால் மனிதர்களிடம் உண்மையை பெறலாம் : ஆய்வில் தகவல்!


காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் வாங்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள். நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள `டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார்டெக்ஸ்’ என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள்.

இப்பகுதியின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள் .

நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்