Thursday, November 17, 2011

பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல்.

இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு ஜூன் 13 முதல் ஜூன் 20 வரை இடம்பெற்றது. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.

1931 இல் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு முன்னர் இருந்து வந்த இலங்கை சட்டசபைக்குப் பதிலாக இலங்கை அரச சபை உருவாக்கப்பட்டது. 58 உறுப்பினர்களில் 50 பேர் பொதுமக்களாலும், 8 பேர் பிரித்தானிய ஆளுநரினாலும் நியமிக்கப்பட்டனர்.

பழைய சட்டசபை 1931 ஏப்ரல் 17இல் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்க சபைக்கான மனுக்கள் 1931 மே 4 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது. இதனையடுத்து இலங்கையின் வட மாகாணத்தில் நான்கு தொகுதிகளில் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன், ஒன்பது தொகுதிகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.ஏனைய 37 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் 1931 ஜூன் 13 முதல் 20 வரை இடம்பெற்றன.

இடைத்தேர்தல்கள்

வட மாகாணத்தின் 4 தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன. பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

யாழ்ப்பாணம் - அருணாசலம் மகாதேவா
காங்கேசன்துறை - சுப்பையா நடேசன்
ஊர்காவற்துறை - நெவின்ஸ் செல்வதுரை
பருத்தித்துறை - ஜி. ஜி. பொன்னம்பலம்

No comments:

Post a Comment