சம்மு காசுமீர் இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருமான்மையினராக உள்ளனர்; லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காசுமீர் மாநிலம், காசுமீர் பிரச்சனையால் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ”இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.
சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.
சம்மு காசுமீர் மாநில கொடி
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment