Saturday, November 5, 2011
முதுமை
முதுமை
மனிதன்
புறப்பட்ட இடம் நோக்கி
புறப்படும் பயணம் !
மனிதனுக்கு
மீண்டும் ஒரு
குழந்தைப் பருவம் !
மனித
எந்திரத்தின்
தேய்மான வெளிப்பாடு !
மனிதன்
வாழ்க்கைப் பாடத்தை
புரிந்து வாழத் தொடங்கும் காலம் !
மனிதன்
வீடு முடிந்து
காடு செல்ல எண்ணப்படும்
"கவுண்டவுன்" நாட்களின்
ஆரம்பம் !
பிள்ளைகளுக்குப்
பெற்றோர்
பிள்ளையாகும் படலம் !
முதுமை..
முன்னால் நிற்கும்
இறப்பை எண்ணி கலங்கும் !
முடிந்துபோன
இளமைக்காக ஏங்கும்!!
முதுமையில் ...
அழகு அழிவாகும்
அறிவு அழகாகும்
உடல் மெலிதாகும்
உள்ளம் தெளிவாகும் !!
மனிதனின்
மனம் முதுமையானால்
இளமையிலும்
முதுமை ஏற்ப்படுவது உண்மை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment