Sunday, November 27, 2011

என்னை முன்வைத்து


சமீபமாக காணமல்
போய்விட்டான் .


மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.


தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது

தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .

No comments:

Post a Comment