Tuesday, January 3, 2012

சோகம் பகிரும் நண்பன் ....



என் தலையணைகள்
தொட்டு தினமும்
சோதித்து பார்க்கிறேன்...
இரவு பகிர்ந்த சோகத்தின்
சுவடு எங்கேனும்
ஓட்டி இருக்கிறா என...
இதயம் கீறிய சோகங்கள்
கண்கள் வழி கண்ணீராக
வடிந்து கரைகிறது தலையணைக்குள்..
ஆயிரம் சோகம் பகிர்ந்த
ஆத்மார்த்த நண்பனாய் எனக்கு
என் தலையணைகள்...
ஒவ்வோர் விடியலுக்கு பி்ன்னும்
என தலையணையை உலர
வைக்கிறேன் சிறிது நேரம்...
அன்றைய இரவின் சோகத்தை
சுமக்க அதனுள் இடம்
தயார் படுத்த வேண்டுமல்லவா...
அத்தனை ரகசியத்தையும் காக்கும்
உற்ற நண்பனாய் தலையணை
கண்ணீர் கரைக்கிறது நித்தமும்...
ஆனமட்டும் தலையணையின் அணைப்பில்
உறங்குகிறேன் சுமந்து வைத்த
சோகத்தை வடித்து வைக்க...

No comments:

Post a Comment