Thursday, January 19, 2012

ஊர் உணரும்!


தோழா!
நிறைவாகும் வரை 
மறைவாக இரு...

நிறைவுகளை உரைக்காதே!

நிச்சயம் ஊர் உணரும்
குறைவுகளால் கரையாதே 
குளித்துவிடு!
 அழுக்குகள் அகல நீ 
அழகாவாய்...
உயர பறக்கும்
 பறவையைப்போல் உரக்க சிந்தனை கொள்!
சிறகுகளை விரி...
உயரும் வழியில்
 உன்னை உயர்த்தும் 
சிறகுகளை மறக்காதே!
நல்வழியில் செல்!
 உயிர்களுக்கு துயர் இழைக்காதே!
ஏர் கைக்கொண்டால் 
இரத்தமும் வேர்வைதான். வாள் கைக்கொண்டால்
 வேர்வையும் இரத்தம்தான்!
 இரத்தத்துளி குலைக்கும்! 
வேர்வைத்துளியே விளைவிக்கும்!
உன்வழி தேர்வு செய்!
 உண்மை உணர்
! உயர் எண்ணம் வளர்!
உன் காலில் நில்! 
விவேகம் விதைத்து
 இடைவிடாது உழைத்து விடு!
உறக்கம் தேவைதான் 
இமை விழிக்க மறுக்கும்போது!
உழைத்த களைப்பில் நீ 
உறங்கும்போது...
உன் கனவுகள் நனவாகும்!
மயக்கம் தவிர்...
துவக்கம் உன்னில்தான்!
 உன் விழிகளில் மின்னல்தான்!
உன் விழி உலர,
 உண்மைகள் உணர 
உள்ளம் உறுதி கொள்ள!
வெற்றிகள் எளிதாகும் 
வாழ்வே இனிதாகும்!
 உயர்வு உன்னைச் சேரும்
 வெற்றி வானம் வசப்படும்!!

No comments:

Post a Comment