சில நேரங்களில் வந்து போகும்
பாடல்களின் முணுமுணுப்பு...
எதையோ நினைத்துப் பார்க்கும் போது
உதடுகளில் தன்னிச்சையான சிரிப்பு...
படிக்கும் போது புத்தகம் தாண்டி
ஏதேதோ நினைவுகள்...
தூங்கும் போது புரண்டு படுக்கையில்
போர்வை தேடும் கைகள்...
சிந்தனையின் போது சுருட்டும்
தலை முடியில் விரல்கள்...
நின்று பேசும் போதே
தானே ஆட்டும் கால்கள்...
மழை பெய்யும் போது
சூடான பஜ்ஜியின் நினைவுகளால் ஊறும் எச்சிகள்...
வெய்யில்லின் கொடுமை தாங்காமல்
ஏ.சி. அறையில் தொப்பென்று விழுதல்...
போக வர மேஜை மீது இருக்கும்
பதார்த்தங்களை மென்று கொண்டே பொழுதைப் போக்குதல்...
சாப்பிட்டு முடித்த பின்னும்
தோசையின் முறுகலை மட்டும் பிய்த்த படியே...
வெந்நீரில் குளித்த அலுப்பு தீர
துவட்டும் போது சொருகும் கண்கள்...
அக்கடா என்று உட்காருகையில்
எழுதும் ரெண்டு துக்கடா கவிதைகள்...
எல்லாமே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள்
சுகமான சோம்பேறித்தனங்கள்...
No comments:
Post a Comment