Saturday, December 31, 2011

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்


தோழ்விகளை முதலீடு செய்
வெற்றிகள் லாபம் ஆகும்

சோகங்களை கண்ணில் இடு
கண்ணீரில் கரைந்து விடும்

சந்தோசங்களை உதட்டில் சேர்
புண்கையில் வாழ்க்கை வரமாகும்

மதங்களை அன்பில் இனை
தெய்வங்கள் உன்னிலும் தெரியும்

இயற்கையை காத்து பார்
சமநிலை உன்னிலும் வரும்

லட்சியத்தை முதலில் தேடு
தன்னம்பிக்கை உனை அழைக்கும்

வீட்டினை கடந்து வா
வாழ்க்கையை அனுபவிக்க தோன்றும்

இளமையில் தூக்கத்தை கலை
நட்பும் காதலும் சொர்க்கத்தை காட்டும்

ஒரு புண்ணைகை வீசு
ஓராயிரம் மனிதர்கள் சேரும்

எண்ணங்களில் தூய்மாய் இரு
எதிர்பாரத சந்தோசங்கள் காண்பாய்

மலர்ந்திடும் வருடம் எம்
அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்

உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த
புது வருட நல் வாழ்த்துக்கள்

Tuesday, December 27, 2011

இந்த உலகில எங்க தப்புநடக்கிறது தெரியுமா?

தப்பு பண்ணுரவநெல்லாம் ஜெய்ப்பம் என்று உறுதியோட செயல்படுறாங்க,
நல்லது பண்ணுரவநெல்லாம் தோத்திடுவமோ என்று தயங்குறாங்க.

உயர்ந்தவன்

ஒரு ஆயிரம் தீவிரவாதிகளை
தூக்கில் இடுபவனைவிட
ஒரு
அனாதையை அணைக்கும் உள்ளம்தான் உயர்ந்தவன்👌

Sunday, December 25, 2011

"நல்லவன்"

என் சிரிப்பைப்
பார்த்ததும் என்னைப்
"பைத்தியம்" என்றார்கள் !

என் அழுகையைக்
கண்டதும் என்னை
"அழுமூஞ்சி" என்றார்கள் !

எதிர்த்துக் கேட்கையில்
என்னைத் "திமிர் பிடித்தவன்"
என்றார்கள் !

பாராட்டிப் பேசுகையில்
என்னைப் "பச்சோந்தி"
என்றார்கள்.

குற்றத்தைச்
சொல்லும்போது
என்னைத் "துரோகி"
என்றார்கள் !

எல்லாவற்றிற்கும்
தலையசைத்தபோது
என்னை "நல்லவன்"
என்றார்கள் !!

இன்றைய உலகம் இது தானோ???

தனிமை ...!!

இரவின் நிலவும்
இவளும் ஒன்றோ ..!!
தனிமையில் வாழு(டு)ம்
இளம் கன்றோ??!!

எத்தனை ஏக்கங்கள்
இந்த கண்ணில்
இதை கண்டும்
இறக்கம் இல்லையோ
உந்தன் நெஞ்சில் ??!!

கரு சுமந்த
உரு தெரியாமல்,
தெரு ஓரமாய்
ஒரு வேளை பசிக்கு
மருகி, விதிக்கு
கருகி ..உதிரும் இந்த
மொட்டுக்கள்
எத்தனை ..எத்தனை..!!!
இதில்
ஒன்றேனும் உன் பார்வைக்கு விழவில்லையோ ??!!!
இல்லை
உனக்கு பார்வையே இல்லையோ??!!

எறும்புகள் கூட
கூடித்தான் வாழுகின்றன ..
காக்கைகள் கூட
பகிர்ந்துதான் உண்ணுகின்றன ..

மனிதா
உன் வீட்டு தோட்டத்தில்
பூத்த பூ இது !!
அதை
நீ வாட விடுவது ஏது??

வாழ்வதை விட
வாழவைதுப் பார்
கடவுள்
உன்னுள் தோன்றுவார்
நீ செல்லும் பாதையில்
மலராய் மாறுவார்
என்றும்....என்றென்றும்....

வேண்டிடும் பழைய வாழ்க்கை...

இயந்திரதனமற்ற இயல்பு உலகம்.
நிலவொளியின் முற்றத்தின் உறக்கம்.
வாஞ்சனையான விசாரிப்புகள்.
பொய் வேசமிடாத புன்னகை.
அரட்டைகள் அரங்கேறும் திண்ணை.
மண் வாசனை துணைகொண்ட மழை.
கண்டிப்பான பாசம் - பாசக் கண்டிப்பு.
பொய்கூற வைக்கா அலைபேசி.
கணினி இல்லா சுதந்திர மனிதன்.
கூட்டுக் குடும்பத்தின் கூட்டாஞ்சோறு.
சுற்றம் அறிமுகம் கொண்ட தோழமை.
பிரதிபலன் பார்க்கா பங்காளிகள்.
பெரும் கதை கொண்ட ஒத்தையடிப் பாதை.
நினைவுகளை மெல்ல அசை போடும் மாட்டு வண்டிப் பயணம்.
அடுத்த ஊருக்கு மணக்கும் கை பக்குவமான சமையல்.
உடலோடு உள்ளமும் பசியடங்கும் உபசரிப்பு.
உள்ளத்தில் வரும் வெளிப்படைப் பேச்சு.
வெள்ளந்தி மனிதர்களின் விசாரிப்பு கரிசனம்.
எழுத்துகள் தாங்கிய ஏக்க கடிதங்கள்.
ஊருக்கு பயந்த படபட காதல்.
தினம் தோறும் குரங்குகளின் சிறப்பு வருகை.
அவர்களை எதிர்கொள்ள தயாராக நிற்கும் நன்றி மறவா ஐந்தறிவு யீவன்.
அலார கூச்சலற்ற சேவல் சத்தம்.
அதனுடன் கூடிய குயிலோசை.
குளத்தங்கரை வேப்ப மரம்.
மனிதனை மனிதனாய் பார்த்த மனிதம்.

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் மனிதநேயம்...

பச்சை தண்ணீருக்கும்
விலை சொல்லிடுகையில்
மனிதனின் மனதில்
எங்கே பார்த்திட
இரக்கமென்னும் நீரை...

மனிதன் இயக்கி வந்த
காலம் புதைந்து - இன்று
மனிதனை இயக்கும்
இயந்திரங்கள்...

கேட்டால் போட்டி உலகம்.
மனிதம் மறந்து,
நியாயம் புதைத்து,
அதன் மேல் ஓடி
வெற்றிக் கொடி நாட்ட,
யாருண்டு பாராட்ட...

கிராம் கணக்கில்
உதவி எதிர்பார்த்திட,
தங்கம் அளவு விலை....

அக்றினை யாவும்
பிறந்த பலனாய் உதவிட,
மனிதன் மட்டும்
ஏனோ மறந்துபோனான்
மனிதம் செய்திட...

பணம் காசு சேர்ப்பதோடு
நாலு நல்ல மனங்களையும்
சேர்த்து வையுங்கள் பத்திரமாய்...

பணத்திற்கு தரும் மதிப்பை
மனதிற்கும் கொடுத்து.
முடிவில் சேருமிடம்
கொண்டு செல்ல வேண்டி...

சின்னதாய் வேண்டுகோள்...
அழிந்து போன பட்டியலில்
மனித நேயத்தையும்
சேர்த்து விடாதீர்கள்...

Friday, December 23, 2011

காலம் மீது வைத்த காதல் கண்ணீராய் போனது????

எதிர் பார்த்த வாழ்க்கை கனவிலாவது நிறைவேறதா என்ற ஏக்கம்.,ஏற்றம் பெரும் நாள் வராதா என்று ஏமாற்றம் அடைகிறேன் .,எதிர் பார்த்த வாழ்க்கை எதிரிலையே கரைகிறது.,கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது வெறும் நான் கடந்து வந்த சுவடுகள் மட்டும்தான் தென்படுகிறது அந்த பாதையும் வெறிசோடி கிடைகிறது..,காரணம் சொல்ல முடியவில்லை..,காரியம் சாதிக்க முடியவில்லை..,ஏங்கித் தவித்தது போதும் என்றிருந்தேன்.., ஓங்கி அடிக்கிறது இந்த சமுதாயம்..,
காலம் கடந்து வந்தாலும் காயங்கள் மறையவில்லை.,காகிதமாகி ப்போன என் வாழ்க்கையில் எழுத்துப்பிழைகள் ஏராளம்.,அர்த்தம் புரியாத இந்த வாழ்க்கையால் சற்று ஆடித்தான் போனேன் .,இயற்க்கை தந்த இந்த வாழ்க்கையை நல்ல முறையில் இயக்கிதான் பார்க்க முடியவில்லை..,முடிந்தவரை முயற்சிக்கிறேன்..,முடிவு காண முயலுகிறேன் ..,தவிப்போடு விடைப்பெறுகிறேன்

வேதனை

மனித இதயம் - ஒரு வெள்ளை காகிதம் போன்றது...
கவிதை எழுதியவர்களை விட அதை
கசக்கி எறிந்தவர்கள் தான் அதிகம் ...

எதிர்பார்ப்பு

அன்பு, பாசம், அக்கறை.. இவை அனைத்தும்
எதிர் பார்க்காத நேரத்தில் , எதிர் பார்க்காத நபர் மூலம் கிடைத்தால்
அதற்கு ஈடு இணை வேறு எதுவும் இருக்க முடியாது ...

Thursday, December 22, 2011

புத்தக விலை

தனிமையை தவிர்க்க
என்னையே
நேசிக்கத்தொடங்கினேன்
''புத்தகமாய்''
விலைபோகும்
அளவுக்கு.....

கிராமத்துக்காரன்

அழுக்குப் பிடித்த
அரைக் கால் சட்டையோடு
ஆனந்தமாய்ச் சுற்றித் திரியும்
குழந்தைகள் பார்க்கையில்...!

களை பிடுங்கிய களைப்பாறி
வயல்வெளியில் வட்டமாய் உட்கார்ந்து
ஊர்க்கதைகளோடு உணவையும் பரிமாறும்
பெண்கள் பார்க்கையில் ...!!!

ஆல மரத்தடியில்
அகலத் துணி விரித்து
அண்ணாந்து படுத்திருக்கும்
அண்ணாச்சிகள் பார்க்கும் போதும் ..!!!

மச்சான் மாப்ளே
மாமியா நாத்துனா கொழுந்தனா
ஆத்தா அப்பச்சி அம்மாச்சி
அத்தனை சொந்தங்கள் பார்க்கும் போதும் ..!!!

வெற்றிலை மென்று கொண்டே
முற்றம் அமர்ந்து முன்னூறு கதைகள்
முப்பொழுதும் சொல்லும்
கிழவிகள் பார்க்கையில் ..!!!

பசி தீர்ந்தால் போதும்
பாசம் இருந்தால் போதும்
பணம் எதற்கெனப் பாடும்
மனங்கள் பார்க்கும் போதும் ...!!!

பச்சை மரங்கள் பார்க்கையில்
பாடும் பட்சிகள் பார்க்கையில்
வயல் பாயும் வாய்க்கால் பார்க்கையில்
வளையோடும் நண்டு பார்க்கையில்
அலையோடும் குளம் பார்க்கையில்...!!

சின்ன அறைக்குள் சிக்கி
நகரத்தின் வீதிகளில்
நசுங்கித் திரியுமெனக்கு
ஏன் படித்தோம் எனத் தோன்றும்
மனம் வலிக்க அழத் தோன்றும்
விவசாயமே செய்திருக்கலாமென்று
விசும்பத் தோன்றும்...!!!

செய்யும் விளம்பரம் உண்மையில்லை
இதழின் சிரிப்பில் உண்மையில்லை
எங்கும் பணம் பணம்
எங்கிருக்கிறது மனம் மனம் ...!

அலுவலகக் கோப்புகளை
ஆனந்தமாய் மறந்து விட்டு
அடுக்குமாடி கட்டிடத்தை
அப்படியே விட்டுவிட்டு
ஊர் சென்று உலாவ
தீபாவளி பொங்கலை
ஆவலோடு நோக்கும் மனசு ...!!!

ஒவ்வொரு கிராமமும்
ஒரு அழகான கவிதை
அங்கே எழுதுக்களாய்ப்
பிறக்க எல்லோருக்கும் பிடிக்கும்...!!!

கம்ப்யூட்டர் முன்
கன்னத்தில் கரம் வைத்து
அடுத்த அரசினர் விடுமுறையை
ஆவலாய் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் இவனுமொரு
கிராமத்துக்காரன் ...!!!

மனிதர்கள்

மலரும் மௌனத்தையும்,
போலியான சிரிப்பையும்,
ரகசிய அந்தரங்க விம்மலையும்,
உணர்ச்சியில்லா தூக்கதையும்
உண்மையான பொய்மையும்
பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி வெறுமையிலே
மனம் மரத்துப் காய்ந்த
பின்னும் உள்ளம் வெம்பி
நிற்க வைக்கும் பழி சொல்லும்
உலகமிது...

பேசப் பழகு

பால் திரிந்தால் மோராகும்
சொல் திரிந்தால் விஷமாகும்
திரியாமல் நீ பாத்துக்கோ
திருத்தமா பேச பழகிக்கோ

Wednesday, December 21, 2011

"மனிதனா மிருகமா"

மதத்திற்கே மதம் பிடிக்கும்
அளவிற்கு மதம் பிடித்திருக்கும்
மனிதனைவிட..,
மதம் பிடித்தாலும் தன் கோவத்தை
தன் இனத்தின்மேல் காட்டாமல்
தன் இடத்தின்மேல் காட்டும்
யானையே எனக்கு மேல்......

தன் வீடு தன் மக்கள் தன் குடும்பம்
என வாழும் சுய நலக்காரனை விட
பாதித்தீனி கிடைத்தாலும் பகிர்ந்துண்டு
வாழும் காகமே எனக்கு மேல்.......

குழந்தையை பாரமென்று எண்ணி
கால் ஊனமுடியா வயதிலேயே
கான்வென்ட்டுக்கு அனுப்பி வைக்கும்
மனிதனைவிட.....,
கால் வளர்ந்தபின்னும்
தன் குழந்தையை வயித்திலே சுமக்கும்
கங்காருவே எனக்கு மேல்.......

மனிதநேயத்தோடு மனசார
சோறு போடுவான் ஒருத்தன்,
உண்ட உப்பு உரைக்கும் முன்னரே
உணவு போட்டவனையே
போடுவான்(அடி,வெட்டு) இன்னொருத்தன்,
இவர்களைவிட.....,
ஒருமுறை ஒருபொறை(வருக்கி) போட்டால்
ஒருவாரம் வீட்டு வாசலில் கெடக்கும்
நாயே எனக்குமேல்.......

மனம் அடிக்கடி அடிக்கு அடி மாறுது,
போதை தலைக்கு ஏறுது,

நேருக்கு நேர் மார் ஓடுது,
நேர்மையில்லாமல் வாடுது,

கண்கள் கண்ணீரால் தளும்புது,
அதுவா இதுவா என புலம்புது,

அதையும் இதையும் தேடி போவுது,
அங்க இங்கன்னு தாவுது,
தாவித்தாவி காலெல்லாம் நோவுது,
கடைசியில எல்லாத்தையும் இழந்து சாவுது...!

=========================================
மேற்படி பார்க்கப்போனால் மனிதனைவிட
மிருங்கங்கள் மதிக்கபடுபவையாக உள்ளன
ஆதலால் நான் மிருகமாக இருப்பதில்
பெருமையே எனக்கு.........
=========================================
{குரங்கிலிருந்து வந்தவர்கள் தானே நாம்
பின்பு நம் குணம் மட்டும் எப்படி வேறாகும்}
````மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு````

வலிக்கிறது வாழ்க்கை

அறியாத காயம் அனுபவமில்லாத வலி..

புதியதாய் தோன்றுகிறது வாழ்க்கை..

வாழப்பிறந்தோம் என்பதற்காக வலியோடு வாழ வேண்டாமே..

வலிக்கான மருந்து உன் வாழ்க்கையின் வழியிலே விழித்திருக்கும்..

கண்டுகொள்ளாமல் சென்றால் வலி உன்னோடு பயணித்துக் கொண்டேதான் இருக்கும்..

பிறந்தது வாழத்தான்.. ஆனால் காடு போன போக்கிலே அல்ல..

நீ வகுத்த வழியில் வாழ்க்கையை எடுத்துச்செல் ..

அதன் முடிவு உன் முயற்சிக்குக்கிடைத்த பரிசாய் பிரதிபலிக்கும்..

பிறந்ததின் அர்த்தமும் வாழ்வின் மகத்துவமும் உணர்வாய்..

என் கவிதை

என் வாழ்க்கையை
இரசிக்காதவர்கள் எல்லாம்
என் கவிதையை
இரசிக்கிறார்கள்- ஆனால்
என் வாழ்க்கையைத் தான்
நான் கவிதையாய்
வார்க்கிறேன் என்பதை
வாசிப்பவர்கள்
கண்டு கொள்வது....................

Tuesday, December 20, 2011

இறுதி வரி


இறுதி வரி(வரை) ஏக்கம்...........
மதங்கள் மனிதம் உணரக்கண்டேன்....

சின்னங்கள் ஒன்றாய் இணையக்கண்டேன்....

ஏழைகள் மனதில் சிரிப்பை கண்டேன்...

விழாக்கள் ஒன்றாய் வலம் வரக்கண்டேன்...

மனிதத்தை மனிதன் அடைந்திடக்கண்டேன்...

தீவிரவாதிகள் பொதுச்சேவை புரியக்கண்டேன்...

கண்டங்கள் ஏழும் இணையக்கண்டேன்...

உதவும் கரங்கள் உயர்ந்திடக்கண்டேன்...

இவையணைதையும் ,,,,,,,





பகலில்
கனவில் கண்டேன்...........

கூறுங்கள் பகல் கனவு பலிக்குமா?

கடவுள் எங்கே?

ஆன்மீகவாதியைக் கேள்,
விண்வெளியைச் சுட்டுவார்,
கண்ணுக்குத் கடவுள் தெரிவதுண்டோ!
கோவிலைக் காட்டுவார்,
கோவிலில் சிலைகள் மட்டுமே உண்டு;

பூமியில் மனிதரில்
காணாத கடவுளையா
விண்வெளியில், கோவிலில்
காண்போம்!

அன்பு கொண்டவர் மனத்திலும்
மனிதாபிமானம் உள்ளோரிடமும்
கள்ளமில்லா குழந்தைகளிடமும்
பார் தெரியும்.

பாடம்

என் வாழ்கை ஆசானிடம்
நான் கற்றுக்கொண்ட
" முதல் பாடம்"
எவரையும் உண்மையாக நேசிக்க கூடாது.
என்றும் உனக்கு நீ தான் ☝
இப்படிக்கு
ஜெனந்தன் குமாரசாமி

அன்பை நிரூபி

சயின்ஸ் ஆகட்டும்
சாஸ்திரம் ஆகட்டும்
அன்பை தவிர
அது எதை நிரூபித்தாலும்
அதனால் என்ன பயன் ?🌺

Sunday, December 18, 2011

பொய் என்ன செய்யும் ?

உறவு தீபம் கருக கருக
ஏற்றிய பொய்
தீ நாக்கு..!

மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

குப்பைத் தொட்டிக்குள்
குழந்தையை மனிதன் போடுகிறான்
குரங்கும் கங்காரும்
குட்டியை வயிற்றில் சுமக்கிறது
மிருகங்களுக்குள் மனிதாபிமானம்

விடியலைத் தேடி


விடியலைத் தேடி ஒரு கடிதம் எழுதினேன்..

விடிந்த பிறகு தான் தெரிந்தது..

நான் இரு கண்களையும் இழந்த குருடன் என்று..

ஒன்னுமில்லா சந்தோசம்

வெளியே கிடைக்கும் சந்தோசங்கள்
வெள்ளைப் பூண்டுகள்

பிரிவின் எல்லைகள்..!

மதம் காக்க போர்,
மிளகுக்காக போர்,
தங்கத்திற்காக போர்,
எண்ணெய்க்காக போர்,
இப்போது தண்ணீருக்காகவும் போர்.!
இனி காற்றுக்காகவும் நடக்கலாம்.!

ஆரியன்-திராவிடன்
வடஇந்தியன்-தென் இந்தியன்
தமிழன்-கன்னடன்
தமிழகம்-கேரளம்
குறுகிக்கொண்டே போகும்
எல்லைகள்,காட்டுவதென்னவோ
பிரிவின் அகலங்களை..!

மதம்-இனம்,மொழி-நிறம்
நாடு-எல்லை,
அரசியல்-பொருளாதாரம்
எல்லாம் கடந்து
ஒரே வானம்,ஒரே பூமி
அனைவரும் மனிதர்களே..
எப்போது வரும்
அந்தக்காலம்..?

அன்பின் வலி ...........

அன்பாய் வளர்த்த
ஆட்டுக்குட்டி விற்ற காசு

அரைப்பவுன் மோதிரமாய்
விரலில்

மோதிரவிரலைப் பார்க்கும் போதெல்லாம்
ஏனோ வலிக்கிறது மனது ............

Thursday, December 15, 2011

உண்மை எதுவென்று தெரியும்.

கண்ணெதிரே நிற்பவர்
யாரென்று தெரியும்
உண்மையில் அவர்
யாரென்று தெரியாது...

கேள்விகளுக்கு பதில்கள்தான்
சரியென்று தெரியும்
கேள்விகளுக்கு சரியான
பதில்கள் தெரியாது...

தெரிந்தவையெல்லாம் தெரியாமலும்
தெரியாததெல்லாம் தெரிந்தும்
போகலாம்...என்றாவதொருநாள்!
உண்மை எதுவென்று தெரியும்.

உறவுகள்....

உயர்ந்தால் ஓட்டும்....
உதவி என்றால் வெட்டும்.....

தேடி வரும் தென்னை

மாடி வரை வளர்ந்த தென்னை
என்னவோ என்னுடனே எப்போதும்
ஜன்னலுக்கு உள்ளும் தலை நீட்டி...

எப்போது சொன்னாலும்
தலை ஆட்டும் தென்னை என்ன
காற்றுக்கு அடிமையா?

மரத்தின் மேலும் கீழும்
ஓடி விளையாடும் அணில்களுக்கு
தென்னை அதன் சொத்தா?

மண்ணிலே இளநீரை எறிந்து
விளையாடும் தென்னைக்கு
மண்ணின் மௌனம் புரிகிறதோ?

எத்தனை இடறினிலும்
மௌனமாய்த் தாங்கும் மண்ணுக்கு
அஞ்சலி செலுத்துமோ தென்னையும்?

ஒரு பக்கத்துச் சுவரினால்
வளர முடியாமல் போய்
என் பக்கம் வந்தாயோ?

கம்பிச் சூட்டை தாங்குமோ என்னவோ?
இந்த தென்னையின் கைகளை
காப்பாற்றுவது எப்படி?

கம்பியை வளைத்தால் எனக்கு பாதுகாப்பில்லை
தென்னையை ஒடித்தால்
அதற்கு வலியின் தொல்லை...

இருக்கும் வரை சேர்ந்திருப்போம்
ஜன்னல் வழி பார்த்திருப்போம்
தென்னைக்கும் ஒரு தேங்காய் உடைப்போம்...

அச்சம் வேண்டாம் அன்பு கொடு

வாழை கன்று நீ நட்டாய் -
வாழை கன்று பிறந்தது...!
விதை என்ற அன்பை நீ நட்டால்...
விருட்சமாய் அதுவும் வளராதோ..?
யோசித்து முடிவெடு...!
அச்சம் வேண்டாம் அன்பு கொடு !

Wednesday, December 14, 2011

காலம் செய்த மாற்றம்

கோடி உயிர்கள் விதைகளாய் புதைந்து
பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்தில்
வேற்றுமை கலந்துவிட்டது
மேலவர்களுக்கு உள்ள சுதந்திரம்
கீழவர்களுக்கு இல்லை
நாய்களுக்கு இருக்கும் நன்றி
மனிதர்களிடம் இருப்பது குறைவு
யாரை பிழை கூறுவது ?
காலம் மாறிவிட்டது , மனிதரையும்
மாற்றிவிட்டது ...........

கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

காட்டு வழியே செல்கின்ற
குருட்டுப் பிச்சைக் காரன் நான்
இடர்களுக்கு நடுவே செல்கிறேன்
பாதகம் இல்லாமல் நான் கடக்க
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா!

அரசியல் புயல் என்னை தாக்கிடலாம்
அஞ்ஞானம் எனும் வெள்ளம் அடித்திடலாம்
வழிப்பறி காவலரிடம் நான் கொள்ளை போகலாம்
தொழில்றீதிக் கள்வர்கள் எனைக் கவவர்ந்திடலாம்
இந்த கோர விபத்திலிருந்து காப்பாற்ற
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

லஞ்ச ரத்தக் காட்டேரிகள்
கறுப்புப் பண இடுகாட்டுப் பேய்கள்
பதவி வெறி பிடித்த ஓநாய்கள்
ஊரை ஏய்க்கும் குள்ளநரிகள்
வந்து என்னைத் தீண்டிடாமல்
கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா !

மறைந்திருப்பதை பார்க்கலாம்

வண்டு மூடிய மாம்பழம்
கல்லுக்குள் தேரை
மனசுக்குள் மனிதம்
ஒளிந்து கொண்டிருப்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்

Tuesday, December 13, 2011

வெளிச்சம் வேண்டும்

விளக்கும் அற்ற-ஒரு
வீட்டுக்குள்
விழுந்து கிடக்கிறேன்
விதியோ இல்லை
நான் கொண்ட
மதியோ
அதனை மதிப்பிடக்கூட
எனக்கு மதி
போதவில்லை
விதி தான் என்னை
விழ
வைத்தது
விளையாட்டாம் அதற்கு
என்னுடன் எதற்கு
வீண் வம்பு
விளகிச்செல்லாமல்
வீராப்பாய்
விலை பேசுகிறது
என் என்னை
எதற்கு
என்று நான் அறியேன்............

இருட்டறையில்
ஈ கூட
இல்லை
இந்த ஏழை
இருதயம் மட்டும்
இளக்காரம் போலும்
இம்சைப் படுகிறேன்
அஹிம்சை அற்ற
இருளே
அகன்று விடு
முதலில் என்னைக்கட்டி
அடுத்ததாய் என் கண்ணைக் கட்டி
இன்னும் என் உயிரைக்கட்டப்போலும்
உன் உத்தேசம்,
உயிர்தேளும்வரை நான்
ஒரு
உருவற்ற
உடல் தான்- நான்
உயிர் பெற்றுவருவேன்
ஒரு நாள்
என் யாகம்
பலித்து விட்டால்.........

வெறுமை...!!!

பாசமும் நேசமும் படை சுடி நான் நிற்கையில்.
வேஷம் என்று நீ உன் வழி நடக்கையில்.
வாசலே இன்றி நான் வாழ்கிறேன்...!!!

ஆங்கிலம்

If someone feels
that they had never made
a mistake in their life...
It means they had never tried
a new thing in their
life..........

எங்கே மனிதாபிமானம் ?

இமய மலையில் ஒரு ஈ
மனித மலையில் மனிதாபிமானம்
உறைந்து விட்டதா ?
உயிர் வாழ்கிறதா..?

ஏழாம் அறிவு .

ஓரறிவு உயிரினம் மரம், செடி, கொடி,
இரண்டறிவு உயிரினம் நத்தை, சங்கு, ஆமை
மூன்றறிவு உயிரினம் எறும்பு, கரையான்
நான்கறிவு உயிரினம் நண்டு, வண்டு, பறவை
ஐந்தறிவு உயிரினம் ஆடு, மாடு, சிங்கம், புலி
ஒரு சில மனிதர்கள்
ஆறறிவு உயிரினம் மனித பிறவி
(சிரிக்க சிந்திக்க தெரிந்தவர்கள்)
7வது அறிவு மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

சில உறவுகள்...

புதிதாய் காலையில் வரும் தினசரிகளுக்கு
என்றும் அதிரடி வரவேற்பு
இன்று கூட...

ஓரமாய் பெட்டியில்
சேர்ந்திருக்கும் பழைய தினசரிகள்
யாரும் தேடப்படாமல் அடுக்கடுக்காய்...

ஒவ்வொரு தாளும் ஆசையாய்
ஒரு நாளில் படிக்கப் பட்டது
இன்று இப்படி சீண்டுவார் இல்லாமல்...

முதலில் இருக்கும் சுவாரஸ்யம்
பின்னாளில் இருப்பதில்லை
வெறும் குப்பைகளாய்ச் சேரும் உறவுகள்...

Tuesday, December 6, 2011

வரணி ஊடாக பருத்துறை

கொடிகாமம், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான சிறிய நகரங்களில் ஒன்று. அதன் கேந்திர நிலையமும், யாழ்ப்பாணத்தின் தேங்காய் தேவைகளைப்பூர்த்தி செய்யும் தென்னந்தோட்டங்களும் கொடிகாமத்தின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்.

புகையிரதம் ஓடிய காலத்தில் வடமராட்சியில் இருந்தவர்களுக்கு கொடிகாமந்தான் போக்குவரத்திற்கு வசதியான புகையிரத நிலையம். ஆக தென்பகுதிகளுக்கு பிரயாணம் செய்பவர்கள், தேங்காய் வியாபாரிகள், ஏனையோர் என்று பலரும் பயணிக்கும் பருத்தித்துறை- கொடிகாமம் (டீ68) வீதி முக்கியமான ஒரு வீதி. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தார் ஊற்றப்பட்டு, பின்னர் ஒரு சில சமயங்களில் மட்டும் குழிகள் நிரவப்பட்டு மழையில் அரித்துச் செல்லப்பட்டு, அந்த வீதி சந்திரமண்டலத்தை ஞாபகப்படுத்தும். உயரங்குறைந்த ஜப்பானிய தயாரிப்பு வாகனங்கள் அந்த வீதியால் செல்லமுடியாதோ என்று சந்தேகப்படும் ஒரு நிலை.

விண்வெளிக்கு முதலில் ராக்கெட் அனுப்பிய, முதலில் மனிதனை அனுப்பிய ரஷ்யா ஏன் முதலில் மனிதனை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு கதை உண்டு (உண்மையில் நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் இறங்கினாரா என்று சந்தேகப்படுவது வேறு கதை). சந்திரனுக்கு அமெரிக்கர்களுக்கு சிலநாட்கள் முன்னரேயே புறப்பட்ட ரஷ்யர்கள் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியைப்பார்த்துவிட்டு விண்கலத்தை திசைதிருப்பி மணற்காட்டில போய் இறங்கிவிட்டார்களாம். மரங்களில்லாத மணற்கும்பிகளுக்கு நடுவில் இருந்துகொண்டு அங்கிருந்த மணலை ஆராய்ச்சி செய்தார்களாம் (அதில்தான் மணற்காட்டு மணலில் சிலிக்கா செறிவு மிகவும் அதிகமாகவுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை). யாரோ பெர்மிட் இல்லாமல் முகமூடியெல்லாம் போட்டுக்கொண்டுவந்து வந்து களவாக மணல் அள்ளுறாங்கள் என்று நினைத்த பொலிஸ் ரஷ்யர்களைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டதாம். அந்த இடைவெளியில் அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் போய்விட்டார்களாம்.

இப்படிப்பட்ட பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை பல தசாப்தங்களாக வழங்கிவரும் தட்டிவான்கள் தனித்துவமானவை. ஐம்பது வருடங்களிற்கு மேற்பட்ட வயது, இரும்பினாலான துருத்திக்கொண்டிருக்கும் முகப்பு, மரப்பலகைளால் செய்யப்பட்டு இரும்புச்சட்டங்களால் பிணைக்கப்பட்ட உடற்பகுதி, மரப்பலகைகளாலான ஆசனங்கள், 4 அடிக்கு மேற்பட்ட உயரமுடையவர்கள் எழுந்து நிமிர்ந்து நிற்க இயலாத தாழ்ந்த கூரை, எந்தக்கிடங்கையும் தாண்டக்கூடிய பெரியசிற்கள், கூரையில் வைக்கப்பட்டிருக்கும் மேலதிக சில்லு, கண்ணாடிகளற்ற திறந்த யன்னல்கள், காற்றினை அழுத்தி இயங்கும் ஒலியெழுப்பி அதனுடைய தனித்துவமான 'பாம் பாம்' ஒலி, இயந்திர ஒலியும் மரத்தாலான உடலின் அதிர்வும் சேர்வதால் ஏற்படும் விசித்திர ஒலி என்று தட்டிவானின் தனித்துவ அடையாளங்கள் பல.

சிலதசாப்தங்களுக்கு முன்பு பல பாதைகளிலும் போக்குவரத்துச் சேவையிலீடுபட்ட தட்டிவான்கள் வசதியான பேருந்து (பஸ்) மற்றும் சிற்றூர்தி (மினிபஸ்) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வசதிகளுடன் போட்டிபோட முடியாத தட்டிவான்களின் உரிமையாளர்கள் பலரும் அவற்றைக் கைவிடத்தொடங்கினர். இந்நிலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் நிலை காரணமாக போக்குவரத்துச் சேவையிலீடுபட பேருந்து மற்றும் சிற்றூர்தி உரிமையாளர்கள் ஆரம்பத்தில் தயங்கியதால் அந்த வீதியின் போக்குவரத்துச் சேவையை தட்டிவான்களின் உரிமையாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். சிறிதுகாலத்தின் பின் போக்குவரத்துச் சேவையிலீடுபட முயன்ற சில சிற்றூர்திகளும் தட்டிவான் உரிமையாளர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ஆக அரிதான பல காலங்களிலும் இயங்காத அரசுப் பேருந்து சேவையைத் தவிர பருத்தித்துறை- கொடிகாமம் வீதியின் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை என்பது இன்றுவரை தட்டிவான்களின் ஏகபோகத்திலேயேயுள்ளது. போர்க்காலத்தில் டீசலுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் கூட மண்ணெண்ணெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்த கலவையில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஓட தட்டிவானின் எதையும் தாங்கும் இயந்திரம் ஒத்துழைத்தது.

அதிகாலை நேரத்தில் பருத்தித்துறை பேருந்து நிலயத்திற்கு மந்திகை,துன்னாலை, நெல்லியடி போன்ற இடங்களிருந்து வரும் தட்டிவான்கள் அங்கிருந்தே தமது சேவையை ஆரம்பிக்கும். பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துள் உட்கார்ந்து பயணஞ்செய்வார்கள். 'இளந்தாரிகள் (இளைஞர்கள்) எல்லாரும் பின்னால ஏறுங்கோ'ம்'சாமான்களையெல்லாம் மேல போடுங்கோ 'ம்' அப்பு வந்து டிரைவருக்குப் பக்கத்தில இருங்கோவன்' என்று கொண்டக்டர் சத்தம்போட்டு பயணிகளை பொருத்தமான இடங்களில் இருத்துவார். கொண்டக்டர் 'அண்ணை றைற்' சொல்ல, தட்டிவான் புறப்படும். தட்டிவான் மந்திகைச்சந்தியில் சிறிதுநேரம் நிறுத்தப்பட மந்திகை ஆசுப்பத்திரியில் (வைத்தியசாலையில்) தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களும், பிள்ளைப்பேற்றிற்கு வந்து கைக்குழந்தைகளுடன் திரும்புபவர்களும், அவர்களின் உறவினர்களும் தலையணை, கூடைகள், பைகளுடன் ஏறிக்கொள்வார்கள். அவர்களுக்கு இருக்கைகளைக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் எழுந்துகொள்வார்கள்.

இளைஞர்கள் வாகனத்தில் பின்புறம் சங்கிலியில் தொங்கும் தட்டில் நின்று கூரையிலுள்ள இரும்புச்சட்டத்தைப் பிடித்தபடி புழுதியில் குளித்து வெயிலில் காய்ந்தபடி பயணிப்பார்கள். ஆனாலும் காற்றோட்டத்தால் வெய்யில் உறைப்பதில்லை. ஒவ்வொரு கிடங்கையும் வேகம் குறையாது துள்ளிக்குலுங்கி தட்டிவான் கடக்கும்போது பயணிகள் எல்லாரும் பிடைத்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் யாருமே டிரைவரில் கோபப்படுவதில்லை. 'டிறைவரண்ணை! அந்த சிவத்த கேற்றடியில கொஞ்சம் நிற்பாட்டிறியளே?' என்றால் அந்த வீட்டுவாசலில்கூட பயணியை இறக்கிவிடுவார்கள். வாடிக்கையாக பயணப்படும் தேங்காய் வியாபாரிகளும், நாவல்பழம் விற்கும் ஆச்சிகளும் வாகனத்தின் சத்தத்திற்கு மேலாக சத்தமாக குடும்பக்கதைகளை, ஊர்ப்புதினங்களை அலசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். வழியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் வாசலில் தட்டிவான் நிறுத்தப்பட்டதும் கொண்டக்டர் ஓடிச்சென்று கற்பூரம் கொழுத்தி உண்டியலில் காசுபோட்டுவிட்டு வருவார். பயணிகள் சிலரும் இறங்கிப்போய் கும்பிட்டுவிட்டு வருவார்கள். இறங்க முடியாத சிலர் செல்பவர்களிடம் உண்டியலில் போடக் காசு அல்லது கற்பூரம் கொடுத்துவிடுவார்கள். கோயிலுக்கு போனவர்கள் வரும்போது கையில் திருநீறு கொண்டுவந்து எல்லோருக்கும் நீட்டுவார்கள். எல்லோரும் மனதாரக்கும்பிட்டு திருநீறு பூசியதும் தட்டிவான் புறப்படும். கொடிகாமத்தைத் தட்டிவான் அடைந்ததும் பயணிகள் இறங்கிக்கொள்ள, சிலர் டிரைவருக்கும் கொண்டக்டருக்கும் 'போயிட்டு வாறன்' சொல்லிவிட்டுப் போவார்கள். தட்டிவானை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவரும் கொண்டக்டரும் தேத்தண்ணிக்கடையிற்குப் (தேநீர்க்கடை) போய்விடுவார்கள்.
கொடிகாமத்தில், பருத்தித்துறை செல்லும் பயணிகள் வந்து ஏறிக்கொள்ள, தேங்காய் வியாபாரிகள் மூட்டைகளைக் கொண்டுவந்து கூரையில் ஏற்றுவார்கள். வெற்றிலை சப்பியபடி டிரைவர் வந்து ஏறிக்கொள்வார். கொண்டக்ரர் 'அண்ணை றைற்' சொன்னதும் மீண்டும் தட்டிவான் உறுமலுடன் பயணத்தை ஆரம்பிக்கும். அதே கலகலப்பு, துள்ளல் குலுக்கல்களுடன் பயணம் தொடரும்.

எத்தனையோ வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துகளில் பயணஞ்செய்பவர்கள் கூட அந்தளவு சுவாரசியமான, மகிழ்ச்சியான, உயிரோட்டமான பயணத்தை மனதார அநுபவிப்பார்களா என்பது சந்தேகமே.

Saturday, December 3, 2011

வார்த்தைகள்


தனித்திருத்தலின்

வலி அறியா

தவிப்பின் தனல் புரியா

காற்றைப் பிளந்து

எனைக் கிழிக்க வரும்

உன் சொற்களுக்கு….