மாடி வரை வளர்ந்த தென்னை
என்னவோ என்னுடனே எப்போதும்
ஜன்னலுக்கு உள்ளும் தலை நீட்டி...
எப்போது சொன்னாலும்
தலை ஆட்டும் தென்னை என்ன
காற்றுக்கு அடிமையா?
மரத்தின் மேலும் கீழும்
ஓடி விளையாடும் அணில்களுக்கு
தென்னை அதன் சொத்தா?
மண்ணிலே இளநீரை எறிந்து
விளையாடும் தென்னைக்கு
மண்ணின் மௌனம் புரிகிறதோ?
எத்தனை இடறினிலும்
மௌனமாய்த் தாங்கும் மண்ணுக்கு
அஞ்சலி செலுத்துமோ தென்னையும்?
ஒரு பக்கத்துச் சுவரினால்
வளர முடியாமல் போய்
என் பக்கம் வந்தாயோ?
கம்பிச் சூட்டை தாங்குமோ என்னவோ?
இந்த தென்னையின் கைகளை
காப்பாற்றுவது எப்படி?
கம்பியை வளைத்தால் எனக்கு பாதுகாப்பில்லை
தென்னையை ஒடித்தால்
அதற்கு வலியின் தொல்லை...
இருக்கும் வரை சேர்ந்திருப்போம்
ஜன்னல் வழி பார்த்திருப்போம்
தென்னைக்கும் ஒரு தேங்காய் உடைப்போம்...
No comments:
Post a Comment