இயந்திரதனமற்ற இயல்பு உலகம்.
நிலவொளியின் முற்றத்தின் உறக்கம்.
வாஞ்சனையான விசாரிப்புகள்.
பொய் வேசமிடாத புன்னகை.
அரட்டைகள் அரங்கேறும் திண்ணை.
மண் வாசனை துணைகொண்ட மழை.
கண்டிப்பான பாசம் - பாசக் கண்டிப்பு.
பொய்கூற வைக்கா அலைபேசி.
கணினி இல்லா சுதந்திர மனிதன்.
கூட்டுக் குடும்பத்தின் கூட்டாஞ்சோறு.
சுற்றம் அறிமுகம் கொண்ட தோழமை.
பிரதிபலன் பார்க்கா பங்காளிகள்.
பெரும் கதை கொண்ட ஒத்தையடிப் பாதை.
நினைவுகளை மெல்ல அசை போடும் மாட்டு வண்டிப் பயணம்.
அடுத்த ஊருக்கு மணக்கும் கை பக்குவமான சமையல்.
உடலோடு உள்ளமும் பசியடங்கும் உபசரிப்பு.
உள்ளத்தில் வரும் வெளிப்படைப் பேச்சு.
வெள்ளந்தி மனிதர்களின் விசாரிப்பு கரிசனம்.
எழுத்துகள் தாங்கிய ஏக்க கடிதங்கள்.
ஊருக்கு பயந்த படபட காதல்.
தினம் தோறும் குரங்குகளின் சிறப்பு வருகை.
அவர்களை எதிர்கொள்ள தயாராக நிற்கும் நன்றி மறவா ஐந்தறிவு யீவன்.
அலார கூச்சலற்ற சேவல் சத்தம்.
அதனுடன் கூடிய குயிலோசை.
குளத்தங்கரை வேப்ப மரம்.
மனிதனை மனிதனாய் பார்த்த மனிதம்.
No comments:
Post a Comment