Friday, October 19, 2012

தொடங்கிய பாதை,,,

வாழ்க்கை அகவுரையை
ஒருமுறை திறந்து பார்,,,
அதில் என் வாழ்க்கையை,,
தொடங்கியது நீயாக இருப்பாய்,,,

இன்று,,,மாயை,,என்னும்,,
பிம்பங்களால்,,,என்னை
ஆட்கொண்டுவிட்டு,,
என்னோடு பேசாமல்
போவதேனோ...

உன் விழிகளில் கலக்கமா,,,???இல்லை,,,
நான் உன் இதயத்தில்,,களங்கமா,,???

Saturday, September 22, 2012

ஞாபகங்கள் !

சுனையொன்றில் கயல்துள்ளி சுழன்றுவீழும்
சிறு அலையில் வீழ்ந்தஇலை சேர்ந்துபோகும்
பனைவிம்பம் நீரலையில் பாம்பென்றாடும்
படர்காற்றும் பனிக்கூதல் பெற்றுவீசும்
வனைந்தகழி மண்பானை வரிசைகாணும்
வந்திருந்து குருவியிசை வாழ்த்துப்பாடும்
நனைந்த மழைக்கிழுவைமரம் நின்றபஞ்சும்
நடுவானில் உலர்ந்தபின் எழுந்துபோகும்

மனையிருந்து பெண்ணின்குரல் மகனைத்தேட
மடியிருந்து வளர்ந்தவனும் மறுத்தும் ஓட
சினை முதிர்ந்த பசுஒன்று சினந்து கத்தும்
சின்னதொரு காகம் முதுகினை கோதும்
முனை எழுதும் ஏர்கொண்டு முதுகில்வைத்தே
முழுவயலும் உழுமெருது மெல்லச்செல்லும்
புனைந்தெழிலை பூண்டமகள் கஞ்சிவைத்து
புகை மணக்கும் அழகினொடு போகக்காண்பாள்

கனி விழவும் காலுதைக்கும் கழுதையொன்றால்
கடுமணலும் சிதற ஒருகல் லெழுந்து
தனியிருந்த குருவியயல் தவரிவீழ
தலை போனதென்றலறி திமிறியெழுந்து
நிலமகளை முத்தமிட நெருங்கும் வான
நீலமதில் கூச்சலிட்டு நெடுக ஓடும்
இனியென்ன செய்வதென இழந்தவாழ்வை
எண்ணியொரு இரந்துண்ணும் உருவம்போகும்

வரும் மழைக்கு முகில் கூடி வானில்நிற்கும்
சரிந்த பனைஒன்றில் குயிலிருந்து பாடும்
சந்தமென நடை போடும்வண்டிமாடும்
எரிந்த உடல் சுடலையொன்று இருந்தமௌனம்
இதனருகே போகுமிளம் பெண்ணின்நெஞ்சம்
விரித்த விழி வேண்டாத விளைவுக் கஞ்சும்
விரைந்த கால் நிறுத்த அயல் குரங்குபாயும்

நரி துரத்தமுயலொன்று நடுவில் ஓடும்
நாகமொன்று வளைந்தோட ஆந்தைகத்தும்
பருந்தொன்று குஞ்சைக் குறி வைத்து வீழும்
பறந்து தாய்க் கோழிபயம் விட்டுத்தாக்கும்
கறந்தபசு கன்றினுக்கு கிடந்தபாலைக்
கொள்ளென்று கூட்டிமனம் கசந்து கத்தும்
மறந்த தமிழ்ப்பாடல்தனை மனனம் செய்யும்
மரத்தடியில் மாணவனு மருகில் குருவும்

துணிவிழந்து பயந்துமொரு துரத்தும் நாயும்
தொல்லையிது என்றோடும் தனித்தமாடும்
பணிவிழந்து பெற்றவனைப் பழித்த மகனும்
பக்கத்தி லறிவுரைகள் பகரும் பெண்ணும்
மணியொலிக்க வேதஒலி மந்திரங்கள்
மாசற்ற இறை கூட்டும் மனிதர் வேண்டல்
புனித ஒளி புண்ணியங்கள் பொலிந்துவாழும்
பொறிகளென எழும் நினைவு புதுமை யன்றொ

Thursday, September 20, 2012

சில சிப்பிகள்

பெற்றவர்கள்
பெற்று விட்ட காரணத்தினால்
குழந்தைகள் உங்களுக்கு அடிமைகள்யில்லை .

நீங்கள் சொல்வதை விட
அவர்கள் சிந்தித்ததை
சொல்ல விடுங்கள் .

சக்தி குறைவான நிலை இது
புத்தி தெளிவான நிலை இது .


"நான் என் குழந்தையை
சுதந்திரமாக வைத்திருக்கிறேன் "
என்பவரின் குழந்தையை
கூப்பிட்டு கேட்டால்தானே தெரியும்
அதன் கூப்பாடு .

கொடி படறுவது போலத்தான் அன்பும்.
அன்பு என்பதை கடைசிவரை
வெளிப்படுத்தத் தெரியாமலே
இறந்துபோகக்கூடிய பெற்றோர்கள்
நிறையப்பேர்

குழந்தையிடம் ஜெயிப்பதை விட
குழந்தையை ஜெயிக்க விட்டு
இரசிப்பதே சுகம் .

நீர் செய்த ஒவ்வொன்றும்
அதன் நியாபகத்தில்இருக்காது
நீர் செய்த சிலவற்றை
அவை மறக்காது .

சில குழந்தை
ஒன்றும் செய்யாமலே செல்லும்
சில குழந்தை
பழிவாங்கவும் துடிக்கும்

நீர் அதற்கு எதிராக செய்த
சிறு செயல்
பின்னால் விஸ்வரூபமெடுக்கும் .

ஒரு குழந்தை செய்த தவறை
மறு குழந்தையும் செய்யுமோ
என செய்து விட்டதாக
பாவிப்பதே அதன் அன்பை பாதிக்கும்

குழந்தை வேண்டும் என்று
தவமிருந்தவர்கள் கூட
சரியாக அவர்களிடம்
நடந்து கொள்வதில்லை

உன்னை உணர்
உயிர்களை
தானாக உணர்வாய் .

Tuesday, September 11, 2012

வெற்றி நிச்சயம் ...

தோல்வியை படிக்கல்லாக்கு
அவமானங்களை விதையாக்கு
முயற்சி என்ற வேறை ஊன்று
வெற்றி !...
என்ற செடி வளர்வது நிச்சயம் ...

Friday, September 7, 2012

பிடிப்பில்லை.....

என்னைப்
பிடிக்கும் உனக்கு.....

உன்னைப் பிடிக்கும்
எனக்கு....

இப்போது
எங்களையே
எங்களுக்கு
பிடிக்கவில்லை......

பிடிப்பில்லாமல்
மாறிவிட்ட
வாழ்க்கையால்.....

Wednesday, September 5, 2012

வாழ்க மனித நேயம்........!

உருவத்தில் அழகு இல்லை - அது
உணர்ந்து கொள்வதில் இருக்கிறது....!

காதல் அழகுதான் - அதில்
கருத்து வேறுபாடு எதுவுமில்லை....!

காதலுக்கு உருவம் உண்டோ ?
கண்ணியமாய் அதை உணர்கின்றோம்...!

காணும் மனிதரை இனி
பார்வையாலே அளவிடுவதை விடுத்து
பாசத்தாலே நாம் அளவிடுவோம்......!

வாழ்க மனித நேயம்........!

Wednesday, August 29, 2012

வெறுப்பு.....!

வாசனையை
தரவிரும்பாமல்
அணையத் துடிக்குது
ஒரு
ஊதுபத்தி......!

Monday, August 27, 2012

அன்பின் துடிப்பு....

நீ அன்பை நிரந்தரமாக்க...

நினைத்தாய் என்றால்....

பொறுமைக்கு தலை வணங்கு.....

உன் தலைக்கு....

மகுடம் ஆவதற்கு....

அன்பின் மனம் துடிதுடிக்கும்......

Sunday, August 19, 2012

மூன்று ஆண்டுகள்....!

ஊரை விட்டு
நாட்டை
விட்டு..... அன்பிற்கு
உரியவர்களை
விட்டு.....அடைக்கலம்
தேடி..... புலம்பெயர்ந்து
இன்று மூன்று
ஆண்டுகள்
ஆனது.....ஆகியும்
முடியவில்லை.....பிரியும்
போது கையடக்க
தொலைபேசியில்
மனசில்...... அடக்கமுடியாத
சோகங்களை.....அப்படியே
சொல்லி..... விட்டு... நான்
ஆறுதல்
இல்லாமல்..... ஆயத்தமாகிய
அந்த நினைவுகள்
நிஜமாகவே
கொல்லுது......!

உறவுமுறை வேண்டாம்.....

என்கூட
பிறந்த உறவுகளோடு.....
எனக்கு
அண்ணா....
அக்கா....
தம்பி தங்கை.....என்கிற
உறவு
தொலைந்து போகட்டும்.....

பட்ட கடன்
அடைக்க
உழைத்து வாழ்கிறேன்.....

கடன் பட்டுவிட்டேன்.....
அதைக்கொடுத்து
அவர்களோடு
ஒரு வாடிக்கையாளன்
போல.....வாழும்

அந்த ஒரு உறவுமுறை
மட்டுமே இப்போது.....அது
போதும்...... போகும்
வரைக்கும்......!!

Saturday, August 4, 2012

யார் மனிதன் ..?


யார் மனிதன் ..?
கூட வருபவரெல்லாம் நண்பரில்லை
எதிரே நிற்பவன் எல்லாம் எதிரியுமில்லை !
முகத்துக்கு முன்னே சிரிப்பார் ..
முதுகுக்குப் பின்னே உதைப்பார்..!

துன்பம் வர வேண்டிக்கொள்..!
துன்பமே மனிதனை அளக்கும் கோல்..!
அளந்து எதிரியைத் தெரிந்து கொள் ..!

எவரையும் எளிதில் நம்பாதே !
நம்பியபின் சந்தேகத் தீயில் வெம்பாதே !

"ஆமா"போடுபவன் எல்லாம் நண்பனல்ல !
"இல்லை" சொல்பவன் எல்லாம் எதிரியுமல்ல


உணர்ந்து அறி !
துரோகிகளைத் தூக்கியெறி !

Thursday, June 14, 2012

இந்த உலகம் என்னை வாழ விடுவதில்லை..?!

தவறவிடும் பேருந்துகளில்
கையசைத்து செல்கிறது
எனக்கான வாய்ப்பு..

சொல்ல தயங்கிய
வார்த்தைகளில் தோற்கிறது
என் எல்லா காதலும்..

பரிமாறிக்கொள்ள
பதுங்கிய நிமிடங்களில் கரைகிறது
எனக்கான அனைத்து நட்பும்..

அடியெடுத்து வைக்க தவறும்
முயற்சியில் வீணாகிறது
எதிர்பார்த்த எனக்கான வாழ்வு.... ..

எல்லாம் என்னால் என்பதை
முடிவாய் தெரிந்த பின்பும்...

எப்போதும் போல்
எடுத்துரைக்கிறேன்...
இந்த உலகம் என்னை வாழவிடுவதில்லை.?!..

தன்னம்பிக்கை

துயரம் யாருக்குத்தான் இல்லை
மாட்டிற்கும் இருக்கிறது
வெட்டுகிறார்கள் என்று!!!
மனிதனுக்கும் இருக்கிறது
விட்டுப்போகிறார்கள் என்று!!
துவண்டபோது யாரும்
வரவில்லை..
தூக்கிநிறுத்தவும் யாரும்
வரப்போவதில்லை..
யாரையும் நம்பாதே
உன் தன்னம்பிக்கையத் தவிர
தன்னலமற்ற ஜீவனாக மாறு
தடைகளை உடைத்தெறி
தீவிரமாக முயற்சி செய்
தீஞ்சுவாலை போல் முன்னேறு
திசையெங்கும் உன் புகழ் பரவும்
திகைத்து போவர் உன்னை இழிந்தவர்கள் !!

Friday, June 8, 2012

சமூக அவலங்கள்

மனிதத்தை மறக்கடிக்கும் மதம் ,
ஓற்றுமையை ஒழிக்கும் ஜாதி ,
ஆரோக்கியத்தை
அழிக்க வந்த மருந்துகள் இல்லாத
வைரஸ் வியாதிகள் !

மதம் பிடித்தவர்கள் ,
மது குடிகிறார்கள்,
பிறகென்ன ,
மனிதம் தூங்கிவிடும்
மிருகம் பேச ஆரம்பிக்கும் ,
இரவு முழுவதும்
இவன் வைத்ததுதான் சட்டம் ,
பொருளாதார ஏற்றமும்
இரக்கமும் இதனால் உண்டு !

கரும்பு தின்ன கூலி போதவில்லையாம் ,
இன்னும் கொக்கரிக்கிறார்கள் புது மாப்பிள்ளைகள் ,
கொடுத்ததெல்லாம் கொடுத்து கொடுத்து
பெற்றவர்கள் கழுத்து இருகும் வரை ,
வலுவாக இருக்கிறது தாலிக்கயிறு !

வரம்புகள் மீறிய பக்தி ,
போளிசாமியார்களின் புதுபுது அவதாரங்கள் ,
நெறி தவறிப்போன பக்தி மார்க்கம் ,
கௌரவ பிச்சைகாரர்களின் இறுதி அவதாரம் !

காப்பி கொட்டை தூளுக்குள் ,
புளியங்கொட்டை தூள் ,
சக்கரைக்குள் ரவை ,
அரிசிக்குள் கல் ,
தண்ணீருக்குள் பாலை தேடும் வினோதம் ,
கலப்பட உணவால் கதிகலங்கும் மக்கள் !

வாழவைக்கும் மருத்துவம் ,
சாகடிக்கும் போலி மருந்துகள் ,
சில பணப் பேய்களின்
அதிரடி வளர்ச்சி வைத்தியம் ,
வயித்துவலிக்கு மாத்திரை சாப்பிட்டவன்
மூளை கலங்கி செத்துப்போகிறான் ,
காலாவதி மருந்துகள்
மனிதனையும் காலவதியாக்குது !

பரந்த உலகில்
பெண்களின் சிறிய உலகம் சின்னத்திரை ,
சீரியல் படங்களால்
சீரழிந்து போகும் கலாச்சாரம் ,
மனிதர்களை மறக்கடிக்கும்
மாயத்திரை !

கல்வி இன்று மனிதனை
மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக
உருவாக்குகிறது
அல்லது ,
பணம் ஈட்டும் கருவியாக படைக்கிறது ,
அனுபவ பாடங்கள் ,
நல்ல கதைகள் ,
புத்தகங்களோடு சரி ,
ஒழுக்கங்கள் கட்டுபாடுகள்
காணமல் போய்விட்டது பள்ளியின் பீஸ் லிஸ்டில் !

தேடலில் தொடங்கி ,
கண்டவனையெல்லாம் கணவனாக நினைத்து , களையிழந்து ,
கரும்பு சக்கையான பின்பு ,
திரும்பி கடந்தகாலத்தை வேடிக்கை
பார்க்கிறது இளமை ,
எல்லாம் வயசுக்கோளாரின் நாடகம் !

மனிதநேயம் ,
மெத்தை வீடுகள் கட்ட
கூரைகளை எரித்துப்பார்க்கிறது !

சுதந்திர காற்றையா சுவாசிக்கிறோம் ,
இல்லை இல்லை
காற்றிலும் , நீரிலும்
சோற்றில் கூட விஷமல்லவா ,
100 வயதை 50 க குறைத்துவிட்டதே
அதீத விஞ்ஞானம் !

புத்தக பைகள் சுமக்க வேண்டிய கைகள் ,
கூலி வேலையில் கொத்தடிமைகளாய் , எதிர்கால தூண்கள் ,
செங்கல் சூலைகளிலேயா கரைந்து போவது !

உப்பிட்டவனை உள்ளளவும் நினை ,
மறந்து போச்சே உலகம் ,
உழைத்து கொடுத்தவனுக்கு ,
உணவு இல்லையாம் ,
விளைவித்தவர்கலையே
அறுவடை செய்கிறது வறுமை !

தலை நிமிர்ந்த கட்டிடங்களால் ,
தலை குனிந்த நிலத்தடி நீர் ,
எட்டாத நூல் எட்டிப்பார்த்தும் கிட்டவில்லை ,
வற்றிப்போன ஆறுகளில்
நீர்தான் இல்லாமல் போகும் ,
இன்று மணலை கூட காணோம் !

விளைவித்த நிலங்கள்
இன்று விலை நிலங்களாய்,
பசுமை பரவிக்கிடந்த கழனி
பாலைவனமாக மாரிப்போச்சுதே ,

சோம்பேறி உலகம்
உழைத்து சாப்பிட தயக்கம் ,
வழிப்பறி ,கொள்ளை ,
அதற்காக கொலை ,
சட்டத்தின் ஓட்டைகளில்
நன்றாகவே குளிர்காயும் குற்றவாளிகள் !

தொல்லைகளாக வரும்
தொலை பேசிகள் ,
இவர்களின் பேச்சு சுதந்திரம்
வானம் வரை கிழித்துக்கொண்டிருக்கிறது ,
இரவு உறக்கத்தில் அப்பன் ஆத்த தேவையில்லை ,
செல்போனே போதும் !

நேற்றுவரை கொலைகாரன்
இன்று பொதுநலவாதி ,
நாளை அவரே அரசியல் வாதி ,
கொடிகளாய் பறக்கும் அவர்களின் கோமணங்கள் ,
குற்றத்தில் இருந்து தப்பிக்க அரசியல் களம் ,
இங்கு ஒரு ருபாய் போட்டால்
ஓராயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் !

பாரதியின் பாடல்களை
படிப்பதோடு விட்டுவிடாமல் ,
நடைமுறையில் நடைமுறைப்படுத்து ,
நாடு செழிக்கும் நாமும் செழிப்போம் !

Tuesday, June 5, 2012

நம்பிக்கை துரோகம்


உன்பேச்சில் பொய்கள் அதிகமாய் இருக்கும்..
என்றாலும் என்னிடம் சொல்லமாட்டாய்...
இது நம்பிக்கை...

இவன் நம்புவான்,
ஏமாற்றி விடலாம்..
இது துரோகம்

நான் கொண்ட அன்பிற்கு,
நீ தந்த மகுடம் அது.

ஏற்றுக்கொள்கிறேன்
ஏனென்றால்,...
என்னன்பில் பொய்யில்லை

Sunday, May 20, 2012

பாலையும், நெருப்புமாய்.....!!

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......

Tuesday, May 15, 2012

மதம்

புறாக்கள் உயரத்திலே அதிகமாக தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும். அவ்வாறு மூன்று புறாக்கள் ஒரு கோவில் கோபிரத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டன, ஒருநாள் கோவில் திருவிழாவிற்காக அலங்கரிப்பு வேலைகளில் பக்த்தர்கள் அதிகம் ஈடுபட்டிருந்தனர். அமைதிக்கு இலக்கணமான புறாக்கள் அதிக ஜன கூட்டத்தை விரும்புவதில்லை, ஆதலால் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு ஓர் மசூதியில் நிலை கொண்டன. அங்கு சில காலம் வசித்து வருகையில் ரமளான் திருநாள் நெருங்குகையில் மசூதிக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். புறாக்களும் தமது இருப்பிடத்தை தேவாலயம் ஒன்றிட்க்கு மாறிக்கொண்டது. அங்கும் தமது குறுகிய ஆயுள் காலத்தை வாழ்ந்து முடிக்கவில்லை. நத்தார் கொண்டாட்டத்திர்க்காக வேலைகள் விறுவிறுப்பாக இடம் பெற்றது. அங்கிருத்து பிறிதொரு இந்துக் கோவிலுக்கு மாற்றிக்கொண்டன.
ஓர் நாள் கோவிலின் அடிவாரத்தில் ஓலக்குரல்கள் ஒலித்தது, புறாக்கள் கீழே பார்த்தன பக்த்தர்களிடையே வாள் வெட்டு.
குஞ்சு புறா தாய் புறாவிடம் கேட்டது, ஏன் மனிதர்கள் சண்டையிடுகிறார்கள் என்று. தாய் புறா அதற்க்கு பதிலழித்தது, மனிதர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவம் என்று மதம் பிரித்துள்ளது. மதத்தினால் மனிதர்கள் மதம்பிடித்து திரிகிறனர் என்றது. குஞ்சு புறா மீண்டும் கேட்டது, எங்களுக்கு அப்படி எதுகுமில்லையா என்று கேட்டது. தாய் புறா பதிலழித்தது நமக்கு அப்படி இல்லாதலால் தான் நாம் அவர்களுக்கு மேலே இருக்கிறோம் என்று மனிதனை பார்த்தவாறு எழனமாக குஞ்சு புறாவுக்கு கூறியது.

Saturday, May 12, 2012

பணம்


பேசியதாய் சொன்ன ,
கடவுள் கல்லாகிவிட ,
இன்று பேசிக்கொண்டு இருக்கிறது
காகிதகடவுள் "பணம் "!

கடவுளை தரிசிக்க
அர்ச்சனை சீட்டு !

கோவில் அர்ச்சனைதட்டில்
பணம் போட்டால் தான்
அய்யர் கூட விபுதி கொடுக்கிறார் !

சில்லறை போடாவிட்டால்
பிச்சக்காரன் கூட
தனக்கு கீழ் என்று
கேவலமாய் பேசுகிறான் !

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
பணம் சம்பாதித்து கொடுக்காவிட்டால் ,
ஊர்சுத்தி என்ற புது பட்டம் !

நடிப்பு என்ற உலகில்
சாயங்களை பூசிக்கொள்ள
"பணம் " பட்டம் !

குச்சி முட்டாய்
வாங்க காசிள்ளவிட்டால்
அப்பனைக்கூட டேய் என கூப்பிடும்
குட்டி குரங்குகள் !

உள்ளே உள்ளதையெல்லாம்
மறைத்துவிட்டு
வெளியே வேடிக்கை காட்டும்
பணக்காரா கழுகுகள் !

காசுக்காக நீதியைகூட
கூண்டில் ஏற்றும் ,
பணம்(பலம்) வாய்ந்த சட்டங்கள் !

ஆறடி பள்ளம் தோண்டவும்
ஆயிரம் ருபாய் பணம் கேட்கும்
வெட்டியான்கள் !

சொத்து ஓட்டத்தை தீர்மானிக்கும்
ரத்த ஓட்டங்கள் ,
கையில் காசில்லாமல் போனால்
கைதட்டி சிரிக்கும் ஏளனக்கூட்டம் !

அப்பனை மகன் வெட்டுகிறான் ,
மகனை அப்பன் வெட்டுகிறான்
எல்லாம் பணத்துக்காக !

நேசமாய் கிடைக்கவேண்டிய
அந்தரங்கம் கூட
காசுக்காக கூவி கூவி தெருவில் !

நூறு ருபாய் விதை போட்டு
ஆயிரம் கொடிகள் கொள்ளையடிக்கும்
அரசியல் திருடர்கள் !

பட்டுபுடவை வாங்கி தராததால்
பகையாளிகளாக மாறும் ,
கணவன் , மனைவிகள் !

அன்பு ,
நேசம் ,
பாசம் ,
எல்லாம் பணத்தில்
அடகுவைத்துவிட்டர்கள் ,
இனி என்ன
பணம் தான் பேசும்

Friday, May 11, 2012

தெய்வீக நட்பு,,,,,,,,,,,,

நண்பா !
என்னை பார்க்கும்
போதெல்லாம் - சிரிக்கிறாய் ,
மலரும் பூவாய்
முகம் மலர்ந்து - அழைக்கிறாய் ,
தினம் எனை பார்த்தாலும்
திடீர் விருந்தாளியை
உபசரிப்பது போல் உபசரிக்கிறாய் ,

எந்த அவசர வேலையையும்
எனக்காக ஒதுக்குகிறாய் ,
உறவுகளை எல்லாம் உதறிவிட்டு
என்னோடு ஊர் சுற்ற
வந்து விடுகிறாய் ,

என்னை தவிர்த்து
சாப்பிட மறுக்கிறாய் ,
சாப்பிடுகையில்
என் தட்டில்
உன் உணவையும்
எடுத்து வைகிறாய் ,

எவ்வளவு திட்டினாலும்
சரி சரி விடு என்கிறாய்,
கோபமாக முறைத்தாலும்
குழந்தையாக சிரிக்கிறாய் ,

உனக்கு
உதவாத போதும் - எனை
உதாசீன படுத்தவில்லை - நீ
என் சுமைகளை
சுமந்து கொள்ள
குனிந்து நிற்கிறாய் - நீ ,

கண்ணனாக போதிக்கிறாய்
கர்த்தராக மன்னிக்கிறாய்
அல்லாவாக அன்பு சொல்கிறாய்
கவலைகள் மறக்கும்
மருந்தாக இருக்கிறாய்
பாசமெனும் விருந்தாக இனிக்கிறாய்,

மாகன்களின்
சந்திப்பை விட - உன்
சந்திப்பில்
மனம் மகிழ்கிறது

நண்பா !
சந்நிதானத்தின்
தெய்வ தரிசன சிலிர்ப்பை
உன் தூய நட்பில்
உணர முடிகிறது - இப்போது.

Tuesday, May 8, 2012

மனிதன் யார்

மனிதன் யார்

கடவுளின் படைப்பில்
விலங்கு, பறவை ,
எல்லாம் அப்படியே பார்வையில் ,
ஏனோ மனிதன் மட்டும் கண்ணில் படாமல் !

ஊமையின் உபாசனம் ,
குருடனின் வழிகாட்டல் ,
செவிடனின் இசை ஆர்வம் ,
என எல்லாம் நம்பிடலாம் ,
மனிதனை மனிதனாக பார்பதற்கு பதில் !

தனக்கொன்று நேர்ந்தால்
தரணியையே வெறுப்பான் ,
மற்றவனுக்கு என்றால்
மார்தட்டி சிரிப்பான் !

பணம் என்ற பார்வையில்
மனம் தெரியாமல் போகும் ,
சினம் என்று வந்துவிட்டால் ,
மிருகங்களும் தோற்கும் !

அதிகார போர்வையில்
ஆணவம் தலைதூக்கும் ,
அடங்கி போனபின்பு ,
அத்தனையும் செயலிழக்கும் !

இன்பத்தில் தோல்கொடுப்பான்
துன்பத்தில் கால் இழுப்பான் ,
நன்றி விசுவாசத்தில்
நாய் கூட சற்று மேல் !

வேட்டைமீது குறி இருக்கும் ,
வேண்டும்போது அன்பிருக்கும் ,
அத்தனையும் ஆனபின்பு ,
நீ யார் என்பது அடுத்த கேள்வி !

மனிதம் இருக்காது ,
மதம் இருக்கும் ,
அன்பு இருக்காது ,
ஆசை இருக்கும் ,
குணம் இருக்காது
கோபம் இருக்கும் !

Thursday, May 3, 2012

கடவுள் பக்தி


----கல் அல்ல கடவுள்----

ஈரோட்டு கிழவனுக்கு
செவி கொடுக்காதவர்கள்.
என் மை பாட்டுக்கா
மனமாறிவிடுவார்கள்?

கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படித்தான் என் கவியும்.

நேரடியாக கேட்டுவிடுகிறேன்
நெருஞ்சி முள் கேள்விகளை
உங்களிடம்..

வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?

தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சிளம் பிள்ளைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...

இங்கு
வாய் வரைந்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.

நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு பாலாபிசேகம்.

யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பிராத்தனை செய்த
சித்தர்கள் யார்?

தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதாய்
துதிபாடுவோரே!

சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன்
அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?

நான் மனிதன் என்று சொன்னால்
நகைத்து
இவன் பைத்தியம் என்பீர்கள்.

நான் சாமி என்று சொன்னால்
நம்பி
இவனே பரமபொருள் என்பீர்கள்.

பைத்தியமே
உன் பகுத்தறிவு
பாராட்டுக்குரியது.

எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?

செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
- - - - - - க்கு வையுங்கள்
செத்துமடியட்டும்.

சிந்தித்துப் பாரப்பா....
உண்டியலுக்கும்
திருவோடுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?

உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.

வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.

நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.

ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.

உன் அருகில் உள்ளவன்
அழுகும் போது
அவனை அரவணைத்து
அறுதல் சொல்
அதுவே ஆன்மிகம்.

உன் இறைவனை
உயர்திணையில்
உட்கார வைத்த நீ

அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?

கல்லை வழிபடும்
உங்கள் கூற்றுப்படி
உலகிலே பெரிய கடவுள்
இமய மலைதான்.

கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.

Wednesday, May 2, 2012

என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை

நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
---திரு. டெஸ்கார்டஸ்--

இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது.
எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
--பெயர் தெரியா பெரியவர்---

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
--புத்தர்---

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
--பெயர் தெரியா பெரியவர்---

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
---மாவீரன் நெப்போலியன்---

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.
வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.
--பெயர் தெரியா பெரியவர்---

நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்---

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
--பெயர் தெரியா பெரியவர்---

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
--பெயர் தெரியா பெரியவர்---

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
--ரஸ்கின்---

எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
---திரு. எட்மன்ட் பார்க்---

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா---

காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம்.
ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும்
செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
--பெயர் தெரியா பெரியவர்---

நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,
நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
--சுவாமி விவேகாந்தர்--

எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு,
உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர்.
--பெயர் தெரியா பெரியவர்---

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
--- அண்ணல் காந்தி ---

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
---தத்துவஞானி சாக்ரடீஸ்--

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
--தத்துவஞானி கன்பூசியஸ்---

அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான்.
அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,
ஒருவருக்கு உணவளி அது போதும்

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
--அன்னை திரசா--

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
--திரு. வோயாஸ்---

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
--கவிஞர் ஹோமர்--

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
--பெயர் தெரியா பெரியவர்---

வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
--கவிஞர் சுகி---

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.
உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
--பெயர் தெரியா பெரியவர்---

ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான்.
சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான்.
--பெயர் தெரியா பெரியவர்---

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
---பைபிள்---

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
---திரு. ஹென்றி டேவிட் தேரோ----

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
-- தத்துவஞானி கன்பூசியஸ்---

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
--திரு. டாக்டஸ்--

வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும்.
--பெயர் தெரியா பெரியவர்---

உன்னால் இது முடியும் என்று சொல்கிறபோது
அந்த செயலை செய்ய
என்னைப் போல் ஒரு சோம்பேறியை பார்க்க முடியாது.
உன்னால் இது முடியாது என்று சொல்கிறபோது
என்னைப்போல் ஒரு இயந்திரத்தை பார்க்க முடியாது.
-- நான்---

அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.
--பெயர் தெரியா பெரியவர்---

எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
--பெயர் தெரியா பெரியவர்---

சாதிக்க துடிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்

பணக்கார பிச்சைக்காரன்

சில்லறை நிரம்பிய
பிச்சைக்காரன் தட்டில் ,
காசு போடா பாக்கெட்டை
தடவி தடவி பார்க்கிறான்
பணக்கார பிச்சைக்காரன் !

Tuesday, May 1, 2012

கடவுள்

கல்லை செதுக்கி சிற்பம் வடித்தான் சிற்பி....! அந்த சிற்பமோ கருவறையில் சிற்பியோ தெருவறையில்...!

Wednesday, April 25, 2012

நரைமுடி


காலையில் தலைவாறும்
தருணம் ஏதோ ஒரு சிறு தடுமாற்றம்.

விளக்கை எரியவிட்டு
கண்களை விரித்துப் பார்த்தேன்.

லேசான படபடப்பு.
முகத்திலும் முளைத்தது
வியர்வைத் துளிகள்.

வியர்வையை துடைத்தெறிந்து,
தலை முடிக்குள் விரல்விட்டு,
சிறிது விலக்கி, கண்ணாடியில் பார்த்தால்,
ஆங்காங்கே நரைமுடிகள்.

பதட்டத்திற்கு அர்த்தம் புரிந்து
ஆராய ஆரம்பித்தேன்.

நரைமுடி ஒன்றோ ரெண்டோ அல்ல,
மொத்தமாய் நூறைத் தாண்டும் போல.

நரைமுடிகளே வயதாவதை ஊருக்கு
விளம்பரப் படுத்தும், உச்ச நட்சத்திரங்கள்.

இருந்தாலும் இவைகளை என்
அனுபவங்களின் அட்ச்சானியாய் பார்க்கிறேன்.

நெற்றியில் படரும் நரைமுடிகளை,
என் கல்லூரி அனுபவங்களாய் உணர்கிறேன்.

தலை நடுவில் வீற்றிருந்த
ஒரு கொத்து நரைமுடிகள்,
பலரோடு போட்டி போட்டு
நான் பெற்ற முதல் வேலையை
பறைசாற்றுகிறதோ?

காதோடு கரை புரளும் நரைமுடிகளோ,
காத்திருந்து
கவி பல பாடி,
கண்ணியத்தை நிரூபித்து,
பாசத்தை புரியவைத்து,
நேசம்காட்டி நெகிழவைத்து,
சண்டை சச்சரவு ஏதுமின்றிய
கணத்தை காட்சிபடுத்துகிறதோ?

மாடாக உழைக்காமல்,
ஓடாக தேயாமல்,
எனகென்ற ஒரு வீட்டை,
வங்கி துணைகொண்டு
வாங்கி மகிழ்ந்ததை,
ஒரு சில சிறு நரைமுடிகள்
வாஞ்சையோடு விளங்க
வைக்கின்றனவோ?

வெளிநாட்டு வேலைக்காக
மேற்க்கொண்ட முதல் விமானப் பயணம்.
நான் ஆகாயத்தில் பறக்கும் போது,
நிலத்தில்
நின்று கொண்டே பரந்த
சேதி கேட்டு, கண்ணீரோடு
கர்வமும் எட்டிப் பார்த்த தருணத்தை,
துண்டு நரைமுடிகள்
தம்பட்டம் அடிக்கின்றனவோ?

என்மீது பொறாமை கொண்டு
பல பொல்லாத நரைமுடிகள்
பல்லைக் காட்டியது என் பின்னந்தலையில்?

எதிரிகளே சூழ்ந்திருக்கும் இந்த கலியுகத்தில்.
அறியாமலே நான் சேர்த்த நண்பர் கூட்டம்.
யாருக்கு கிடைக்கும்?
நல்ல நண்பர்களே நம்
வாழ்வாதாரங்கள் என்று அரிய
வைக்கவோ வீற்றிருந்தன
சில நரைமுடிகள்?

இப்படி நம் சாதனைகளை
தினந்தோறும் சிந்துபாட,
சிரம் தாழ்த்தி அமர்ந்திருக்கும்
நரைமுடிகளை வெறும்
புற அழகிற்க்காக மை
கொண்டு கொல்ல வேண்டுமா?

Saturday, April 21, 2012

வெறுப்பின் விளிம்பில்

கற்பனை உலாவில்
கனவுகளை ரசித்தேன்;
சந்தோஷத்தின் நறுமணத்தை
நினைவுகளில் மட்டும் சுவாசித்தேன்;
வலிகளின் இம்சையை
இதய துடிப்பில் உனர்ந்தேன்;
புன்னகையின் உயரத்தை
உதட்டளவில் வைத்தேன்;
உவர்ப்பின் சுவையை
கண்ணீரில் ருசித்தேன்;
தவிப்பின் அழுத்தத்தால்
தினம் தினம் துடித்தேன்;
நிம்மதி பசியால்
நினைவின்றி திரிந்தேன்;
குழப்பங்களின் கூச்சலால்
கனம் தோறும் களங்கினேன்;
உணர்ச்சிகளின் பெருக்கத்தை
உள்ளடக்க நினைக்கிறேன்;
போராட்டங்களை போட்டியிட்டு
பொடிநடை நடந்தேன்;
ஆர்ப்பாட்டங்களின் அரவணைப்பில்
ஆயுள் தேய்கிறேன்;
தவறுகளின் எண்ணிக்கையை
அனுபவத்தில் கழித்தேன்;
அனுபவத்தின் பாடங்களை
மனதோடு தேக்கினேன்;
மனிதன் ஏமாற்றுக்காரன் என்பதை
நாளடைவில் கண்டேன்;
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சோடு சேர்த்தேன்;
வாழ்க்கையின் தொடர்கதையை
என்னிடம் ஒப்படைத்தேன்;
என்னை மட்டும் நம்பி
வாழ்க்கையை வாழ்கிறேன்!!!!!!!

நைட் ஷிபிட்

விடி வெள்ளி முளைக்கும் நேரம் விற்றுகொண்டிருக்கிறேன் தூக்கத்தை வெளிநாட்டிற்கு......

Wednesday, April 11, 2012

நினைத்துப் பாருங்கள்...

உழைப்பும் வெற்றியும் தான்
நம்மை அழகாக்குகிறது....
நம்பிக்கையோடும்
தீர்மானத்தோடும் ஒரு
செயலை செய்யும் போது
வசீகரம் தானாகவே
வந்து சேர்கிறது....
நிறம் அழகின் அடையாளம்
அல்ல....
உழைப்பு தருகிற
வெற்றி
நம்மை மட்டும்
அல்ல....நம்மைச்
சுற்றியும் அழகாக
காண்பிக்கிறது......!

சக மனிதனை
உண்மையாக
நேசிக்கிறபோதும்.... ஆசையோடு
அரவணைக்கும் போதும்
வெளிப்படுகிற அழகை
விட...வேறு
எதுவும்
அழகாய் தெரியல இங்கே....

அன்பு நேர்மை உள்ள
மனசுக்கு சொந்தக்காரர்கள்
எந்த நிறத்தில்
இருந்தாலும் அழகாகவே
இருக்கிறார்கள்....

இது வெறும் தத்துவம் இல்லை.... அப்படி
நினைப்பவர்கள்
நினைத்துப்பாருங்கள்.....

Saturday, April 7, 2012

உலகம் ஒரு நாடக மேடை

வாழ்க்கை என்பது நாடகத் தலைப்பு
வசனம் என்பது வாய்வழிப் பேச்சு

மனதில் வேசங்கள் முக பாவனைகள்
பொய்யான சிரிப்பு உண்மை பகட்டு

உலகம் என்பதே நாடக மேடை
சாகும் வரையிலும் நான் யார் நான் யார் ?

தெரியாமலேயே இறந்து போகிறேன்

எங்கே மனிதர்கள் ?

மனித முகம் தெரிந்தது

ஆனால் எங்கே மனிதர்கள் ?
மிருக குணம் உறுமும் குரல்

அன்பறியா அரக்கத்தனம்.......
எதற்க்காக இப்படி
எல்லோருமே ......

கள்ளென்று பால் நினைப்பார்

கள்ளென்று பால் நினைப்பார்
பாலென்று கள் நினைப்பார்
பாரினில் எதைச் செய்யுனும்
பரிகசித்தே அவர் நடப்பார்
உனக்குச் சரியானதை
உத்தமனே நீ செய்
உலகமே எதிர்த்தாலும்
உன்னை ஒரு நாள் வாழ்த்தும்

Sunday, April 1, 2012

பணிவு எனப் படுவது

பணிவு எனப் படுவது
படிப்பு எனப் படும்

பந்தாவாக இருப்பது
பகட்டு எனப்படும்

அடக்கமாய் இருப்பது
அறிவிலே சிறந்தது

அடங்காமல் திரிவது
உருப்புடாமல் போவது

கடவுள் சிலை

கண் எதிரே
கடவுள்

அன்பு கொண்ட
மனிதன்

கண் எதிரே
கல்

அழகு செய்த
கடவுள் சிலை

கல்லும்....

கண்முன்னே
கிடக்கும் கல்லும்
கடவுளாகிறது.... கஷ்டங்கள்
காலடியில் இருக்கும்
போது...!

Monday, February 27, 2012

இந்த வாழ்க்கை...

இந்த வாழ்க்கை எப்படியெல்லாம்
வாழனும் என்று எனக்கு
கற்றுக்கொடுக்கவில்லை....!
மாறாக இப்படி எல்லாம் வாழக்கூடாது
என்றுதான் சொல்லிவிட்டுப் போகிறது...!!

Monday, February 20, 2012

பின்னாளில் ஒரு நாள்..

இவை எல்லாம் சாத்தியமா?
எனும் கேள்வி மட்டுமே மிஞ்சியிருக்கும்...
இனிவரும் உலகில்
எதுதான் சாத்தியமில்லை...!!

வயதாகி ஓய்வூதியம்
பெரும் கடவுள்...!
புதிதாக வணங்க
இன்னொரு இளைய கடவுள்..!!

பிள்ளைகள் படிக்க
நிலவில் ஒரு பள்ளி!!
தினமும் இருவேளையும்
வந்து செல்லும்
நிலா பள்ளி பேருந்து..!!

புதன் கிரகத்தில்
புளியமரம் நடும் விழா..!
நெப்டியூன் வரை
நீர் தேடும் முயற்சி...!!

சட்டபேரவையில்
மெட்ரோ ராக்கெட் திட்டம் தாக்கல்..!
லஞ்சமில்லா அரசு..!!

நவீன காதல் திருமணங்கள்..!
சாதிமத பேதமில்லா
கூட்டு உறவு மனிதம்...!!
ரேஷன் கடைகளில்
பீட்சா, பர்கர்..!!

இயந்திர முதலாளியிடம் இருநூறு
மனிதர்கள் தொழிலாளிகளாய்..!!
கையெழுத்து போட்டு
சம்பளம் வாங்கும்
நவீன கடவுள்கள்...

சிலை இருக்கும்
மூலஸ்தான கருவறைக்குள்
வலை தொடர்பு (இன்டர்நெட்) கம்ப்யூட்டர்..!!

பாக்கெட்டில் தாய்ப்பால்...
பகுத்தறியும் அரசியல்வாதி..
பங்குசந்தையில் இலங்கை முதலிடம்..!!

கற்பழிப்பு, கொலை, கொள்ளை
எனும் வார்த்தை கூட
பல வருடத்தின் முன் பதித்த
செய்திதாள்களில் வெறும் சாட்சியாய் ..!!

டாக்டர் முன் அமர்ந்து
கர்ப்பம் தரித்த
பதினான்கு வயது பெரியமனுஷி,
பாப்கார்ன் கொறித்து கொண்டே,
" இன்னைக்கே கலைத்து விடுங்கள்
நாளை exam இருக்கு..! " - என்பாள்...!!

இவற்றில் எதுதான்
சாத்தியமில்லை....

மாற்றம் எனும் வார்த்தை மட்டுமே
மாறாமல் வாழும்...!!
மாற்றத்திற்கு உடனே தயாராகு....!!! .

Sunday, February 19, 2012

அழகான அந்தி மாலைபொழுது !

முழுமதியின் முகம் பார்க்க
ஆதவன் அடங்கும் நேரம்
காலையில் பள்ளிக்குச் சென்ற
பிள்ளைகளின் வருகையை எண்ணி
அன்னை வாயிலில் காத்திருக்கும்
அழகு தருணம் ...

கணவனின் வருகையை எண்ணி ,
கனவு காணும் மனைவி
ஆயிரம் முறை பார்த்தாலும்
காதலன் கல்லூரி முடிந்து காத்திருக்கும்
காதலியின் மனதிற்கு வருகை தந்து
இன்பமூட்டும் இனிய தருணம்

அலுவலகம் சென்ற அப்பா
அரும்புகளுக்கு ஆசைபொருளை
வாங்கி வரும் அழகு தருணம்

ஆயிரம் கவலைகளோடு
களைபுற்றிருந்தாலும் மனதை
இறகாக்கும் இனிய பொழுது
கவலைகளோடு ஆர்ப்பரிக்கும்
காலைபொழுதை அடக்கி
அமைதியாக்கும் அந்தி மாலைபொழுது ...

கவலைகளோடு விழித்த கண்ணை
கவலையுற்று உறங்க வைக்கும்
இரவை இனிதே வரவேற்கும்
இனிய தருணம்

தேடாதே..!

மதியுனை சாட்சி வைத்து
மடங்கிப்போனவன் திரும்புவானென
தேடாதே..!
உன்னைப் பொத்திவைத்து
உனக்குக் காவலும் வைத்து
உன்னைக் கனவுகள் காணவும்வைத்து
கனவில் நல்லவனாய் அவனைக்
கற்பனை செய்யவைத்து,
கட்டறுத்துப் போனவனை இனியும்
நீ தேடாதே..!
உன் ஏமாற்றத்தை கவிதையாக்கி
கலையாக்கி பின் அதை
விற்பனைப் பொருளாக்கிடும்
விற்பன்னர்கள் அனேகம்..
அதனால் பெண்ணே..!
மதியொளியில் உனை
மதிக்காமல்..
சென்றவனைத் தேடாதே
இனி சிந்தையிலும் தொடாதே..!

Thursday, February 16, 2012

!!! மரணம் என்ற மாயை !!!


''மரணம்''
இது
ஒரு மாயை
நமக்கெல்லாம் பொதுவானது
நமக்கு பிறகும்
எஞ்சி நிர்ப்பது! - இதற்கு
பயப்படவோ...
இதை பற்றி அறியவோ...
இதைத்தேடி போகவோ...
முயற்ச்சிக்க வேண்டாம்!
உன்னைத்தேடி உன் பின்னே - அது
வந்துகொண்டு இருக்கிறது - உன்னை
நெருங்கிய பிறகு
நீயே அதை தழுவிக்கொள் - அதுவரை
வாழ்ந்துக்கொள்...!!!

எல்லாமே
உன்னைவிட்டு
போன பிறகும்கூட
உனக்காகவே உன்னுடன்
வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னுடைய ஒரே சொந்தம்!

''மரணம்''


வேட்டை நாயைப்போல்
உனக்காக
காத்துக்கொண்டு கிடக்கும்
மருத்துவன் இதற்கு
எதிரி என்றாலும்
ஒரு நாள்
அவனையும் ஜெயிக்கும்...!!!


இதற்கு
சாதி கிடையாது!
நல்லவன், கெட்டவன்
பணக்காரன், ஏழை
முட்டாள், ஞானி - எல்லோருக்கும்
பொதுவானது - உலகில்
அதுமட்டுமே நிலையானது...!!!


ஆயுதமாக
எதிரியாக
கோபமாக
பொறாமையாக
அதிகாரமாக - அப்பப்போ
வெளிப்படும் மரணம் - கொஞ்சம்
அசந்தால்
சுடுகாட்டு பயணம்...!!!


வெட்டு
குத்து
கொலை
கோபம் - போன்ற
மனிதனின்
மரணவெறியை கண்டு
மரணம்கூட சிரிக்கிறது - அதற்கு
மனசெல்லாம் நிறைகிறது...!!!


''உங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ?''
நாம்
வாழ்ந்துகொண்டு இருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
குறைந்துகொண்டிருக்கும்
ஆயுள்...!!!


நாம் நம்
லட்சியத்தை நோக்கி
செல்கிறோமோ? இல்லையோ?
ஆனால்!
மரணத்தை நோக்கிதான்
செல்கிறோம்
என்பது மட்டும்
மறுக்க முடியாத உண்மை...!!!


நீ பிறக்கும்போதே - உன்னுடன்
சேர்ந்தே
பிறந்துவிட்ட மரணத்தை
தள்ளிப்போட
முயற்சிக்கலாமே தவிர
தடுத்துவிட யாரால் முடியும்...???


நாம் நமது
ஒவ்வொரு
பிறந்த நாளின்போதும்
அனைவருக்கும்
இனிப்பு வழங்கி - சந்தோசமாய்
கொண்டாட தவறுவதில்லை
ஆனால்!
கழிந்த இந்த ஓராண்டில்
நாம் என்ன சாதித்தோம்
என்றும் - நமது
ஆயுட்காலம் ஓராண்டு
தீர்ந்துபோய்விட்டதே என்றும்
கொஞ்சம்கூட யோசிக்காமல்
சந்தோசத்தை மட்டுமே தேடும்
சுயநலவாதிகளாய் நாம்...!!!


சிறு சிறு
வளைவுகள் என்று - நாம்
அலச்சிய படுத்திய
இடங்களில் எல்லாம்
பெரிய பெரிய விபத்துக்கள்!

''அசைக்கமுடியாத சக்தியாய்
மரணம்''


வாழ்க்கையின்
நீதி மன்றத்தில்
பாரபச்சமின்றி - காலம்
நமக்கு அளித்த
ஒரே தண்டனை
மரண தண்டனைதான்...!!!


எப்படியும்
வாழ்ந்துவிட வேண்டுமென்ற
ஆசையில்
வாழ்க்கையை தேடி
நீண்ட தூரம் செல்கிறோம்!
எத்தனை பேருக்கு தெரியும்...???
மர்மமாய் நம்
பின்னே தொடரும்
மரணத்தை பற்றி...!!!


மண்ணாசை
பொன்னாசை
பொருளாசை - நூறாண்டு
வாழ்ந்திடவும் பேராசை
ஆனால்!
மரணத்தின்
மீது மட்டும்
யாருக்குமே
ஆசை இல்லை - ஆனாலும்
மரணம் நம்மை
விட்டுவிட போறதில்லை...!!!


ஒன்று மட்டும்
தெரிந்து கொள்ளுங்கள்
பஞ்ச பூதங்களை தவிர
இங்கு
எதுவுமே
தப்ப முடியாது!
மரணத்தின்
பிடியில் இருந்து...!!!


மரணத்தின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
என்றைக்குமே
கடமை தவறாது!
விதியின் மீது
பழி சுமத்த முடியாது
ஏனென்றால்! அது
மரணத்தின்
மறு அவதாரம்...!!!


அன்பாலும்
ஒழுக்கத்தாலும்
விட்டு கொடுக்கும்
மனப்பான்மையாலும்
மரணத்தைகூட
தற்காலிகமாய்
மரணம் செய்துவிடலாம்
என்பதை
மறந்து போய்விடாதீர்கள்...!!!


மரணம்
கடவள் மாதிரி
கண்ணுக்கு தெரிவதில்லை
என்றாலும்
கடைசியில் தான்
இருப்பதை
ஆணித்தரமாய் நிருபவித்து
காட்டிவிடும் - ஆனால்
கடவளைத்தான்
கடைசிவரை
காணமுடிவதே இல்லை...!!!


மனிதனின் ஆணவத்தால்
மரணத்திற்கு
இரையாகி கொண்டிருக்கும்
மனிதர்களின் எண்ணிக்கை
நீண்டு கொண்டே போகிறது!

''சுடுகாட்டில்கூட இடம்
பற்றாக்குறை''


மரணத்திற்கு பயந்து
கடவளை
அழைக்கும்போதெல்லாம்
மரணம்
கர்வமாய் சிரிக்கிறது!
கடவளாலும்கூட கடைசியில்
என்னிடம் இருந்து
உன்னை
காப்பாற்றவே முடியாது என்று...!!!


மரணம் பெரியதா?
கடவள் பெரியதா? என்று
ஆராய்ச்சி செய்வதை
நிறுத்திவிட்டு
கிடைத்த வாழ்க்கையை
வளமாக வாழ
முயற்சி செய்
ஏனென்றால்!
கடவளாலும்கூட
மரணத்தை
தடுத்துவிட முடியாது...!!!


கடவளுக்கும்
மரணத்திற்கும்
மனிதர்களுக்கும்
பயந்து வாழ்வதைவிட
மனசாட்சிக்கு பயந்து வாழ்
மரணமே உன்னை
நெருங்க அஞ்சும்...!!!


மரணம் உன்னைவிட
பெரியதுதான்
ஆனாலும் - அது
உன்னை ஒரே ஒரு முறைதான்
ஜெயிக்கமுடியும்!
ஆனால் நீ
வாழும் ஒவ்வொரு நொடியும்
மரணத்தை
ஜெயித்துக்கொண்டு
இருக்கிறாய் என்பதை
மறந்துவிடாதே...!!!


மரணத்தை என்னி
அஞ்சவே வேண்டாம்!
எமன்
எருமையில் ஏறி வந்து
பாசக்கயிரை வீசும்வரை...!!!

Sunday, February 12, 2012

யார் குற்றவாளி?

மனிதப்பண்பை வளர்க்கும்
பாசறைதான் வகுப்பறை
இன்று வெறியாட்டம் கொண்ட
கொலை களமாய் மாறியதேன்?

பண்படா பாறையை
செதுக்குகின்ற சிற்பி போல்
மாணவனை சீர்ப்படுத்தி செம்மையுற
மாற்றுகின்ற ஆயுதமாய்
அறிவுரித்தியமை ஆசிரியர் குற்றமா?

மனம் வளம் இல்லாமல்
பகுத்துணர் பண்பின்றி
வஞ்சனை நெஞ்சமுடன்
வளர்ந்து வரும் இளம் சமுதாயக் குற்றமா?

பண்பை வளர்க்காத
வெற்று வார்த்தைகளை தாங்கி வரும்
புத்தக புழுக்களை உருவாக்குகின்ற
சீர்கெட்ட கல்வித் திட்டத்தின் குற்றமா?

யார் குற்றவாளி?
ஆராய்ந்து பார்க்கின்றேன்
அடி மனதில் தோன்றியது
அகிம்சை, அன்பு, ஆன்மிகம் யாவும்
அகராதிகள் மட்டுமே தாங்கி நிற்பதால்
வன்முறை கலாசாரம் வான் உயர் ஓங்கி
வளரும் சமுதாயத்தை சீரழித்து
நாளும் ஊட்டுகின்ற கொலைவெறி!

Saturday, January 28, 2012

நல்ல உறவு வேண்டுமா?

நல்ல நட்பு வேண்டுமா ?
நல்ல தோழியாய் இரு.

நல்ல கணவன் வேண்டுமா?
நல்ல மனைவியாய் இரு

நல்ல மனைவி வேண்டுமா ?
நல்ல கணவனாய் இரு .

நல்ல காதலன் வேண்டுமா ?
நல்ல காதலியாய் இரு.


நல்ல ஆசிரியர் வேண்டுமா ?
நல்ல மாணவியாய்(னாய்) இரு .

நல்ல தாய், தந்தை வேண்டுமா?
நல்ல பிள்ளையாய் இரு .

நல்ல அரசன் வேண்டுமா ?
நல்ல மக்களாய் இருங்கள் .

நல்ல நாடு வேண்டுமா ?
நாட்டு பற்றுள்ளவர்களாய் இருங்கள்.

நல்லதை செய்யுங்கள்
நல்வழி கிடைக்கும்......

Wednesday, January 25, 2012

நம்பிக்கை உறுதியாக !

எல்லாவற்றுக்கும் பதில் இருந்தால்
நம்பிக்கை ஒரு போதும் வருவதில்லை !

ஆனால்

எல்லா கேள்விகளுக்கும் தயாராக இருந்தால்
நம்பிக்கை வரும் !

நாம் எப்போதும் உறுதியாக
எதிர் கொள்வோம் உலகத்தை !

"நம்பிகையுடன் உறுதியாக "

Tuesday, January 24, 2012

பயணமும் பரிணாமமும்

பயணமும் பரிணாமமும் ஒன்றாகவே பயனிப்பதாய் தோன்றுகிறது
பரிணாமத்தின் சான்றா பயணம்....
பயணத்தின் வேகம் பரிணாமத்தின் அளவுகோலா அல்லது
பரிணாமம் பயணத்தின் வேகத்தால் விளைகிறதா
ஒவ்வொருவனும் பயணத்தில் பரிணாமிக்கிறான்
ஒவ்வொரு பயணத்திலும் பரிணாமிக்கிறான்
பயணியை போலவே பயணமும் பரிணாமிக்கிறது
பயணத்தின் தொடக்கம் மட்டுமே அறிய முடியும்
நாம் பரிணாம பயணத்தில் எங்கிருக்கிறோம் அறிய முடியுமோ

சாமிக்கு படையல்

சாமிக்கு படைத்த படையலில்
குறிப்பிட்ட ஒரு பண்டம்
குறைவதாக சொல்லி
கொதித்து போனார்
கோவில் பூசாரி...

வாசலில் கிடக்கும்
வயதான பிச்சைக்காரன்
பசியில் செத்து
பத்து நாளாகிவிட்டது.

உண்மை...

பரந்த புல்வெளியில்,
சில்லென்ற பனிக்காற்றில்
கானக்குயிலின் இசையில்
காட்டு செடியின் வாசத்தில்
மல்லாந்து படுத்துக்கொண்டு...
வானத்தில் வட்டமிடும் கழுகை
பார்க்கும் சுகம்....

சொகுசு பங்களாவில் ஏசி ரூமில்
கிடைத்துவிடுமா????

சிக்கல்

இன்பம் இன்பம் என்று கதைக்கிறோம்
இன்னும் இன்னும் என கதைக்கிறோம்..

இன்று போதும் காலை அல்லது மாலை
என்றுவிட்டு மறுபடி எடுத்து பேசுவோம்...

ஏன் எடுக்கவில்லை என திட்டுக்கொடுப்போம்
வாங்குவோம்... பின்னாடி
யார் யாரிடமோ எல்லாம் திட்டு
வாங்கப் போகிறம் என தெரியாமல்...

வேக நாடி நரம்புகளின் வேகத்துக்கு
தடை போடாமல்....

போன் இல் மீதியைப் பார்த்து
வீதியில் அலைகிற தோழனும் உண்டு...
தோழியும் இங்குண்டு.....இதில்
பெற்றோருக்கும் பங்குண்டு.

நீ சுயநலவாதியா ...!!

மறக்க
நினைக்கும்போது
வந்து
மன்னிப்பு கேட்கிறாய்
நீ சுயநலவாதியா
இல்லை நான்
கல் நெஞ்சக்காரனா?

Sunday, January 22, 2012

எனக்கும் உனக்கும் யார்?

கோடி முறை
கூப்பிட்டு இருப்பேன்
கூட வந்தது
என்னவோ
என் கால்கள்தான்,

என்
பசிக்கும்
பட்டினிக்கும்
பரிமாறியது
என்னவோ
என் கைகள்தான்,

என்
கவலைக்கும் கஷ்டத்திற்கும்
கண்ணீர் வடித்தது
என்னவோ
என் கண்கள்தான்.

எனக்கும் உனக்கும் யார்?

Saturday, January 21, 2012

மனிதனின் நிலை ...!!!

தேவைகள் பல கண்டு
பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைகொண்டு
நிரந்திரமில்லா இந்த வாழ்வில்
ஆண்டுகள் சில இப்புவியில் ஆண்டு
வாழ்ந்த மனிதன்
மிதக்கிறான் பிணமாய் ..!!!
இரக்கமில்லாமல் வாழ்ந்தவன் ,
தானே இறையாகுகிறான்
மொய்க்கும் ஈகும்
மிதக்கும் மீனுக்கும்
பறக்கும் பறவைக்கும் ...!!!

மனிதனின் நிலை
மிதக்கும் குப்பையுடன்
புனிதத்தின் நிலை
அழுகும் மனிதனுடன் ...!!!
வாழ்வின் நிலை
இதைகாணும் மனிதனின்
மனநிலை போல் ..!!!

உண்மை உணர்ந்தால்
மரணமும் வென்றிடும்..
என்றும்...என்றென்றும்..!!!

நாளை சூரியன் உதிக்காது

நம்பவில்லை நீ.

எங்கோ இருக்கும் சூரியன் மீதும்
அன்று படித்த அறிவியல் மீதும்
அத்தனை நம்பிக்கை.

இத்தனை நம்பிக்கையில்
ஒரு துளியேனும்
உன் மீதே நீ வைத்தால்
கடவுளும் கோவிலும் தேவையில்லை
இன்று முதல்
நீ சூரியன்!

Friday, January 20, 2012

தற்காலிக சாபம்...

தூக்கமில்லாக் கனவுகளும்...
நோக்கமில்லாக் கவிதைகளும்...
வழுக்கிவிழும் வார்த்தைகளும்...
பதுங்கி நிற்கும் பார்வைகளும்...
தற்காலிக சாபமாய்த்
தந்துவிட்டுப் போனாய்...

பேச துடிக்கிறேன்...

நடப்பின் பிரிவும் வலிக்கும் என்றேன்...
நான் வலி கொடுக்க மாட்டேன் என்றாய் நீ...
ஆனால் இன்று மற்றவர்களை விட அதிக வலியும் வேதனையும் கொடுதது நீ.... உன் நட்பு...
நம் பிரிவுக்கு பிறகு நீ எப்படி இருக்கிறாய்....?
என்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் நான் உடைந்த கண்ணடியகிவிட்டேன்.......
நீ விட்டு சென்ற சுகமான நினைவுகள் என்னை தினம் தினம் வாட்டுகிறது....
ஆல மர வேறை போல இருக்கிறது உன் நட்பு என் இதயத்தில் ...
ஒரே ஒரு முறை பேச துடிக்கிறேன்......
நடக்குமா.....?

Thursday, January 19, 2012

இந்த கவிதையில் அர்த்தமே இருக்காது!

கவிதைகள் எல்லாம்
அவனை பற்றியதா?
அவளை பற்றியதா? என்பதைவிட.
காதல் பற்றியதால் என்பதே!

வார்த்தைகளை அடுக்கி விடலாம்,
காதல் உன்னை மடக்கி இருந்தால்!
இலக்கியத்தில் செதுக்கி விடலாம்,
காதலை நீ பதுக்கி இருந்தால்!

பொறாமையில் சில வரிகள் பொறிக்க பெறும்,
ஏக்கத்தில் சில வரிகள் எரிக்க பெறும்,
தேடி திரிந்த வரிகளெல்லாம் தெரிய வரும்,
புரியாத இலக்கணமும் புரிய வரும்,
உனக்கும் கவிதை வரும் என்பது அறிய வரும்!

ஊர் உணரும்!


தோழா!
நிறைவாகும் வரை 
மறைவாக இரு...

நிறைவுகளை உரைக்காதே!

நிச்சயம் ஊர் உணரும்
குறைவுகளால் கரையாதே 
குளித்துவிடு!
 அழுக்குகள் அகல நீ 
அழகாவாய்...
உயர பறக்கும்
 பறவையைப்போல் உரக்க சிந்தனை கொள்!
சிறகுகளை விரி...
உயரும் வழியில்
 உன்னை உயர்த்தும் 
சிறகுகளை மறக்காதே!
நல்வழியில் செல்!
 உயிர்களுக்கு துயர் இழைக்காதே!
ஏர் கைக்கொண்டால் 
இரத்தமும் வேர்வைதான். வாள் கைக்கொண்டால்
 வேர்வையும் இரத்தம்தான்!
 இரத்தத்துளி குலைக்கும்! 
வேர்வைத்துளியே விளைவிக்கும்!
உன்வழி தேர்வு செய்!
 உண்மை உணர்
! உயர் எண்ணம் வளர்!
உன் காலில் நில்! 
விவேகம் விதைத்து
 இடைவிடாது உழைத்து விடு!
உறக்கம் தேவைதான் 
இமை விழிக்க மறுக்கும்போது!
உழைத்த களைப்பில் நீ 
உறங்கும்போது...
உன் கனவுகள் நனவாகும்!
மயக்கம் தவிர்...
துவக்கம் உன்னில்தான்!
 உன் விழிகளில் மின்னல்தான்!
உன் விழி உலர,
 உண்மைகள் உணர 
உள்ளம் உறுதி கொள்ள!
வெற்றிகள் எளிதாகும் 
வாழ்வே இனிதாகும்!
 உயர்வு உன்னைச் சேரும்
 வெற்றி வானம் வசப்படும்!!

Tuesday, January 17, 2012

நம்பிக்கை துரோகம்

உலகில்
நான் சந்திக்கும்
பொய்கள் எல்லாமே
உன்னைத்தான்
நினைவு படுத்துகின்றன
அப்படியென்றால்
இதற்கு பெயர்தான்
நம்பிக்கை துரோகமா?...........................

தெரியாது இதுதான் அன்பு என்று



தெரியாது இதுதான் அன்பு என்று

கண் கலங்கி நிற்கும் போது

கை கொடுத்த நட்பை - நான்

நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை..........

துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது

தட்டி கொடுத்த உறவுகளை - நான்

நட்பென்று நினைத்ததும் இல்லை.....


நடந்து செல்லும் பாதை எங்கிலும்

நிழல் போல அருகில் நடந்து வந்து

புன்னகைத்த உள்ளங்களை - நான்

நட்பென்று உணரவில்லை ........

தெரியாது இதுதான் அன்பு என்று

உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்

உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல

உயிரோட்டமான நட்பும்தான் என்று .........

Monday, January 16, 2012

யார் எனக்கு ....

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்.....
தோற்றுப் போனால்
யார் எனக்கு..........

Saturday, January 7, 2012

ஞாபகங்கள்

மனதை அறுத்துப் பார்த்தால்
தெரியும் வடுக்கள் வரிகளாய்...

ஒரு மரத்தைப் போலவே...
மரத்துப் போய்...மறந்து போகாமல்...

கலைந்த கனவுகள்

வெள்ளி மறைகின்ற வெள்ளன நேரத்தில்
தாமரை நிறைந்த தடாகத்தில் நீராடி
எனை குறு குறு என நோக்கிய குவளையை பறித்து
செவ்வனே அமர்ந்திருக்கும் செந்தூரன் அண்ணனுக்கு
சேவித்தேன் மலர்தூவி அபிசேகித்து
செங்கதிரோன் இளங்கதிரில்
செழுத்த மாந்தோப்பில் நடுவினிலே
கருங்கூந்தலை மெல்ல நீவி விட்டு
அங்கு கான குயிலின் ஓசையுடன்
அவை நாணும் பின்னிசை பாடி
அலைந்து ஓடும் வாய்காலில்
பாதம் வரை நனைந்த நன்னீரில்
அடி அடியாய் அடிவைத்து
வரப்பில் சாய்ந்த சோழக்கதிரை
கொய்து மெல்ல கொறித்து கொண்டே
வானில் சூழ்ந்த முகிலினத்தை
காணில் ஆடும் மயில் கண்டு
தேடி ஓடி படம் பிடித்து
காலில் படர்ந்த கொடி முல்லை
தூக்கி மெல்ல வடம் பிடித்து
அருகில் சேர்ந்த தென்னங்கீற்றில்
அணைத்து மெல்ல சுழலவிட்டேன்
கார்மேகம் கனிந்து சுரந்ததனால்
சில்லென நனைந்தது மேலாடை
தஞ்சம் தந்தது முள் ஓடை
காலில் கீறிய கரு முள்ளால்
பதறி எழுந்தேன் படுக்கையிலே
கதறி அழுதது என் கடிகாரம்
காலம் போவதை அறிவுறுத்தி
கனவுகள் யாவும் கலைந்தன அதன்
நினைவுகள் மட்டும் தூங்கவில்லை
கவி வடிவில் அதை தந்துவிட்டேன்
யாம் பெற்ற இன்பம் இன்று
பெருக இவ்வையகம் என்று

நித்தம் நித்தம்

சில நேரங்களில் வந்து போகும்
பாடல்களின் முணுமுணுப்பு...

எதையோ நினைத்துப் பார்க்கும் போது
உதடுகளில் தன்னிச்சையான சிரிப்பு...

படிக்கும் போது புத்தகம் தாண்டி
ஏதேதோ நினைவுகள்...

தூங்கும் போது புரண்டு படுக்கையில்
போர்வை தேடும் கைகள்...

சிந்தனையின் போது சுருட்டும்
தலை முடியில் விரல்கள்...

நின்று பேசும் போதே
தானே ஆட்டும் கால்கள்...

மழை பெய்யும் போது
சூடான பஜ்ஜியின் நினைவுகளால் ஊறும் எச்சிகள்...

வெய்யில்லின் கொடுமை தாங்காமல்
ஏ.சி. அறையில் தொப்பென்று விழுதல்...

போக வர மேஜை மீது இருக்கும்
பதார்த்தங்களை மென்று கொண்டே பொழுதைப் போக்குதல்...

சாப்பிட்டு முடித்த பின்னும்
தோசையின் முறுகலை மட்டும் பிய்த்த படியே...

வெந்நீரில் குளித்த அலுப்பு தீர
துவட்டும் போது சொருகும் கண்கள்...

அக்கடா என்று உட்காருகையில்
எழுதும் ரெண்டு துக்கடா கவிதைகள்...

எல்லாமே வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள்
சுகமான சோம்பேறித்தனங்கள்...


Tuesday, January 3, 2012

ஒரு மாற்றம் வருமா


ஒரு மாற்றம் வருமா
எத்தனை கடவுள் வந்தாலும்,
எத்தனை மனிதர்கள் வந்தாலும்,
எத்தனை ஆசை வந்தாலும்,
எத்தனை அன்பு வந்தாலும்,
எத்தனை இழப்பு வந்தாலும்,
எத்தனை உலகம் வந்தாலும்,
எத்தனை உயிர் வந்தாலும்,
எத்தனை அரசு வந்தாலும்,
எத்தனை உறவு வந்தாலும்,
எத்தனை காலம் வந்தாலும்,
எத்தனை விதி வந்தாலும்,
எத்தனை ஜென்மம் வந்தாலும்…
இது போல் எத்தனை வந்தாலும்,
மனிதர்களின் குணங்கள் மட்டும்'
மாறவே மாறாது',
இயல்பான குணகளை சொல்லுகிறேன்,
இதை எப்படி சொல்லுவது….
உனக்கு' புரிய கூடிய, அறியகூடிய
வார்த்தைகள்' புரிந்தால்...
[காலங்களினால் ஏற்படும் மனிதர்களின் மாற்றம்]
புரிகிறதா '''''''புரிந்தால் ''''''''''''எனக்கு மகிழ்ச்சி…………..
நான் சொல்லி என்ன ஆகுவது,
இதை' விதி என்று நினைத்தால் உன்னுள் சிந்தனை எழுகிறது, நினைத்து பார்…ஒரு மற்றம் உருவாகுமா நம்முள் புது மாற்றம்……..நன்மை ஒன்று உருவாகி விட்டாள் தீமை ஒன்று உருவகிவிடுமா ……????? அது ஏன்…

பதினாறு சொந்தங்கள் ...!

பதினாறு சொந்தங்களும்
பரிமாறும் தருணம் - இதோ

காற்றின் மூச்சில் கைகள்
கோர்க்கும் தாலி
முதல் சொந்தம்

கட்டை விரல் அருகில்
மெட்டி சத்தம்
இரண்டாம் சொந்தம்

பொன் மான் கழுத்திலே
புத்தாடை மோகத்தில்
மாலை மாற்றும்
மூன்றாம் சொந்தம்

ஒளி விடும் கருவியின்
முன் படம் பிடிக்கும்
நாணத்தில் சிவக்கும் வெக்கம்
நான்காம் சொந்தம்

ஐவிரல் கோர்த்து
அக்கினி வளம் வருவது
ஐந்தாம் சொந்தம்

பாலும் பழமும்
பகிர்ந்துண்ணும்
பாசம் ஆறாம் சொந்தம்

தன் வீடு விட்டு
பெண் வீடு செல்லும்
மறு வீடு ஏழாம் சொந்தம்

எட்டு வைத்து நெற்றி
பொட்டு வைத்த வாசலில்
நிறை நாழி கால் தட்டுவது
எட்டாம் சொந்தம்

வகிறார உண்ட பின்
வாயாடும் நலுங்கில்
நயம் பிறக்கும் புன்னகையில்
ஒன்பதாம் சொந்தம்

நீ வேறு நான் வேறு
என்றில்லாமல்
நாம் ஒன்றே என்றது
பத்தாம் சொந்தம்

பத்தும் சொத்தாகும்
பருவங்கள் கூடும்
கட்டில் பந்தம்
பதினொன்றாம் சொந்தம்

முப்பதும் அறுபதும்
முடிந்த பின் முழு
நிலவாய் வளரும் குழந்தை
பன்னிரெண்டாம் சொந்தம்

பன்னிரெண்டு ராசிகளையும்
பதபடுத்தும் பக்குவமும்
பொறுமையும் கடமையும்
பதிமூன்றாம் சொந்தம்

பால் வாடை பெற்ற பின்
மேலாடை அலங்கரிக்கும்
தாய் மாமன்
பதினான்காம் சொந்தம்

வரவு செலவு வாழ்க்கையில்
வறுமை போக்கி
பெருமை காண்பது
பதினைந்தாம் சொந்தம்

இவை எல்லா சொந்தங்களையும்
பெற்ற பின் தங்கள்
ஆயுள் காலத்தை
அதிகரிக்கும் தலைமுறை சொந்தமே
பதினாறாம் சொந்தம்

இருதுருவம்

பிறருக்காக
தன்னையே
அர்பனிப்பவன் தியாகி!

தனக்காக பிறரை
அர்ப்பனிப்பவன்
கெட்ட அரசியல்வாதி!

ஆனால்...
இருவர் எண்ணமும்
மக்களை நோக்கியே.....

சோகம் பகிரும் நண்பன் ....



என் தலையணைகள்
தொட்டு தினமும்
சோதித்து பார்க்கிறேன்...
இரவு பகிர்ந்த சோகத்தின்
சுவடு எங்கேனும்
ஓட்டி இருக்கிறா என...
இதயம் கீறிய சோகங்கள்
கண்கள் வழி கண்ணீராக
வடிந்து கரைகிறது தலையணைக்குள்..
ஆயிரம் சோகம் பகிர்ந்த
ஆத்மார்த்த நண்பனாய் எனக்கு
என் தலையணைகள்...
ஒவ்வோர் விடியலுக்கு பி்ன்னும்
என தலையணையை உலர
வைக்கிறேன் சிறிது நேரம்...
அன்றைய இரவின் சோகத்தை
சுமக்க அதனுள் இடம்
தயார் படுத்த வேண்டுமல்லவா...
அத்தனை ரகசியத்தையும் காக்கும்
உற்ற நண்பனாய் தலையணை
கண்ணீர் கரைக்கிறது நித்தமும்...
ஆனமட்டும் தலையணையின் அணைப்பில்
உறங்குகிறேன் சுமந்து வைத்த
சோகத்தை வடித்து வைக்க...